வெளிநாடு சுற்றுலாவின்போது பாம்பு வித்தை பார்க்கச் சென்ற ஜேர்மானியர் பலி
ஜேர்மானியர் ஒருவர் வெளிநாடொன்றிற்கு சுற்றுலா சென்றிருந்தபோது நாகப்பாம்பொன்று கடித்ததால் பலியானார்.
வெளிநாடு சுற்றுலாவின்போது ஜேர்மானியருக்கு நேர்ந்த துயரம்
57 வயது ஜேர்மானியர் ஒருவர் குடும்பத்துடன் எகிப்து நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அப்போது, பிரபல சுற்றுலாத்தலமான Hurghada என்னுமிடத்தில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்றில் பாம்பாட்டி ஒருவர் நாகப்பாம்புகளை வைத்து வித்தை காட்டிக்கொண்டிருந்திருக்கிறார்.

பார்வையாளர்கள் சிலரது கழுத்தில் பாம்பை சுற்றவிட்டு அவர் வேடிக்கை காட்டிக்கொண்டிருந்த நிலையில், இந்த ஜேர்மானியரின் பேண்டுக்குள் பாம்பொன்றை விட்டுள்ளார் அவர்.
எதிர்பாராதவிதமாக அந்தப் பாம்பு அவரது காலில் கடிக்க, அவசர உதவிக்குழுவினர் அவருக்கு முதலுதவி செய்து மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு சென்றுள்ளார்கள்.
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.
அவர் சார்ந்த பவேரியா மாகாண அதிகாரிகள் இந்த துயரச் சம்பவம் தொடர்பில் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |