ஈரானியர்கள் திறமைசாலிகள்; அமெரிக்காவை அவமானப்படுத்துகிறார்கள்: ஜேர்மன் சேன்ஸலர்
பேச்சுவார்த்தைக்கு என அதிகாரிகளை பாகிஸ்தானில் வரவழைத்து, எந்த முடிவும் எட்டாமல் ஈரான் நிர்வாகம் அமெரிக்காவை அவமானப்படுத்தியுள்ளதாக ஜேர்மன் சேன்ஸலர் கடுமையாக கண்டித்துள்ளார்.
தமக்கு சந்தேகம்
ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் ஈரான் போர் தொடர்பாக வழக்கத்திற்கு மாறாகக் கடுமையாம கண்டனம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அத்துடன், ஈரான் போரை அமெரிக்கா எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவரப் போகிறது என்பதில் தமக்கு சந்தேகம் எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மெர்ஸின் இந்த கருத்து அமெரிக்காவுக்கும் அதன் ஐரோப்பிய நேட்டோ கூட்டாளிகளுக்கும் இடையிலான ஆழமான பிளவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவே கூறுகின்றனர்.
ஐரோப்பிய ஒன்றைய நேட்டோ கூட்டமைப்பானது, உக்ரைன் மற்றும் பிற விவகாரங்கள் தொடர்பாக ஏற்கனவே புகைந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில். மார்ஸ்பெர்க் நகரில் மாணவர்களிடையே உரையாற்றிய சேன்ஸலர் மெர்ஸ்,
ஈரானியர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதில் மிகவும் திறமையானவர்கள் என்பது வெளிப்படை; அல்லது, பேச்சுவார்த்தை நடத்தாமல் இருப்பதில் மிகவும் திறமையானவர்கள்.
அதாவது, அமெரிக்கர்களை இஸ்லாமாபாத்திற்குப் பயணிக்க வைத்து, எந்தப் பலனும் இல்லாமல் அவர்களை மீண்டும் திரும்பிச் செல்ல வைப்பதில் அவர்கள் கைதேர்ந்தவர்கள் என்றார்.
ஒரு தேசம் முழுவதுமே
ஈரானியத் தலைமையால், குறிப்பாகப் புரட்சிகரக் காவலர்கள் என்று அழைக்கப்படுபவர்களால், ஒரு தேசம் முழுவதுமே அவமானப்படுத்தப்பட்டு வருகிறது. ஆகவே, இது கூடிய விரைவில் முடிவடையும் என்று நான் நம்புகிறேன் என்றார்.
போரின்போது ஹார்முஸ் நீரிணையைத் திறக்க உதவுவதற்காகத் தங்கள் கடற்படையை அனுப்பாததற்காக, நேட்டோ கூட்டாளிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அந்த நீர்வழிப்பாதை கிட்டத்தட்ட மூடப்பட்டிருப்பதால், சந்தையில் பெரும் குழப்பமும், எரிசக்தி விநியோகத்தில் முன்னெப்போதும் இல்லாத இடையூறும் ஏற்பட்டுள்ளது.

பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் தொடுக்கத் தொடங்கியதற்கு முன்னதாக, ஜேர்மானி அல்லது ஐரோப்பிய நாடுகளை கலந்தாலோசிக்கப்படவில்லை என்றும், அதன் பின்னர் தாம் தனது ஐயப்பாட்டை ட்ரம்ப்பிடம் நேரடியாகத் தெரிவித்ததாகவும் மெர்ஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஈரான் மீதான இந்தப் போர் இவ்வாறு 6 வாரங்கல் வரையில் நீளும் என தமது தெரிந்திருந்தால், நான் அவரிடம் இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருப்பேன் இது ஈராக் அல்லது ஆப்கானிஸ்தான் அல்ல என்பதையும் மெர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |