வெளிநாடொன்றிற்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயர முடிவு
வெளிநாடொன்றிற்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் இளம்பெண்ணொருவர் சுறா ஒன்றால் தாக்கப்பட்டார்.
ஜேர்மன் இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயர முடிவு
ஸ்பெயின் நாட்டுக்குச் சொந்தமான கேனரி தீவுகளுக்கு (Canary Islands) சுற்றுலா சென்றிருந்த ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த 30 வயது பெண்ணொருவர், நேற்று முன்தினம் கடலில் கட்டுமரம் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது அவரை சுறா ஒன்று தாக்கியதாக உள்ளூர் coastguard ஒருவர் தெரிவித்துள்ளார்.
சுறா தாக்கியதில் தனது கால்களில் ஒன்றை இழந்த அந்தப் பெண் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அவர் ஹெலிகொப்டரில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும்போது, வழியிலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
ஆக, மருத்துவமனையை அடையும் முன்பே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |