ஜேர்மன் மக்களுக்கு அமெரிக்கப் பயணம் தொடர்பில் ஒரு பயண ஆலோசனை
அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதைத் தொடர்ந்து கடுமையான புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
அதன் காரணமாக, முறைப்படி அமெரிக்கா செல்பவர்கள் கூட தடுப்புக் காவலில் அடைக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளதால் ஜேர்மனி கவலையடைந்துள்ளது.
ஆகவே, அமெரிக்கப் பயணம் தொடர்பில் ஜேர்மன் மக்களுக்கு பயண ஆலோசனை ஒன்றை வெளியிட்டுள்ளது ஜேர்மன் வெளியுறவு அலுவலகம்.
ஜேர்மன் மக்களுக்கு ஒரு பயண ஆலோசனை
ஜேர்மன் மக்களைப் பொருத்தவரை, அமெரிக்க விசாவோ அல்லது விசா இல்லாமல் அமெரிக்காவுக்குள் நுழைய அளிக்கப்பட்டுள்ள அனுமதியோ ஜேர்மனிக்குள் நுழைவதற்கான இறுதி உத்தரவாதமாக இருக்காது என ஜேர்மன் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஒரு நபர் அமெரிக்காவுக்குள் நுழையலாமா இல்லையா என்பதை முடிவு செய்வது, இப்போது அமெரிக்க எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் கையில் உள்ளது என்று கூறியுள்ள ஜேர்மன் வெளியுறவு அலுவலக செய்தித்தொடர்பாளர் ஒருவர், ஜேர்மன் அதிகாரிகளுக்கும் இதே நிலைதான் என்று கூறியுள்ளார்.
ஜேர்மன் குடிமக்கள் மூன்று பேர் அமெரிக்காவுக்குள் முறைப்படி நுழைய முற்படும்போது அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜேர்மனி இந்த பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
ஜேர்மன் குடிமக்கள் நடத்தப்பட்ட விதத்தை ஜேர்மனி சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார் ஜேர்மன் வெளியுறவு அலுவலக செய்தித்தொடர்பாளர்.
இந்நிலையில், இது பயண எச்சரிக்கை அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |