ரஷ்யா மீதான அச்சம்: ஐரோப்பிய நாடொன்றில் படைகளை குவிக்கும் ஜேர்மனி
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, புடின் எந்த நாட்டை வேண்டுமானாலும் ஊடுருவலாம் என்ற ஒரு அச்சம் பல நாடுகளிலும் நிலவுகிறது.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், நேட்டோ அமைப்பின் ஆதரவு இருக்கிறது என்ற தைரியம் இருந்தாலும், ரஷ்யாவுடன் நட்பு பாராட்டும் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப் உதவிக்கு வர வாய்ப்பில்லை என்ற ஒரு கருத்தும் உருவாகியுள்ளது.
ஆக, ஐரோப்பா, தன்னைத் தானே காத்துக்கொள்ளவேண்டும் என்னும் ஒரு எண்ணமும் அதிகரித்துவருகிறது.
ஐரோப்பிய நாடொன்றில் படைகளை குவிக்கும் ஜேர்மனி
ரஷ்ய தாக்குதலுக்கு அஞ்சி எஸ்தோனியா, லிதுவேனியா, லாத்வியா ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ ஆகிய அமைப்புகளில் இணைந்துள்ளன.
இந்நிலையில், லிதுவேனியாவுக்கு ஆதரவாக, ஜேர்மனி தனது படைவீரர்களை ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் கொண்டு இறக்கியுள்ளது.
Paulius Peleckis/Getty Images
நேற்று, ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ், பாதுகாப்புத்துறை அமைச்சரான போரிஸ் பிஸ்டோரியஸ் ஆகியோர், 4,800 ஜேர்மன் ராணுவ வீரர்கள், 200 அரசு அதிகாரிகள் அடங்கிய ராணுவப் பிரிவொன்றை லிதுவேனியாவில் நிறுவும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.
இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஜேர்மனி இப்படி தனது படைவீரர்களை மற்றொரு நாட்டில் நீண்ட காலத்துக்கு முகாமிடும் வகையில் கொண்டு இறக்கியுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |