நேட்டோ பிரதேசத்தின் மீது முன்னதாகவே ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடும்! ஜேர்மனி ஜெனரல் எச்சரிக்கை
விளாடிமிர் புடின் நேட்டோ பிரதேசத்தின் மீது தாக்குதலை நடத்தக்கூடும் என்று பயமுறுத்தும் வகையில் ஜேர்மனின் உயர்மட்ட ஜெனரல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அணு ஆயுதக் கிடங்குகள்
ஜேர்மனியின் கூட்டு நடவடிக்கை கட்டளைத் தலைவரான அலெக்ஸாண்டர் சோல்ஃப்ராங்க், ரஷ்யாவின் தாக்குதல் குறித்து வடக்கு பெர்லினில் உள்ள தனது தலைமையகத்தில் இருந்து பேசியுள்ளார்.
அவர், "ரஷ்யாவின் தற்போதைய திறன்கள் மற்றும் போர் சக்தியை நீங்கள் பார்த்தால், நாளைக்கே நேட்டோ பிரதேசத்தின் மீது ரஷ்யா ஒரு சிறிய அளவிலான தாக்குதலைத் தொடங்க முடியும்.
ரஷ்யாவின் விமானப்படை மற்றும் அணு ஆயுதக் கிடங்குகள் பெரும்பாலும் அப்படியே உள்ளன. குறுகிய கால தாக்குதலை நடத்த ரஷ்யாவில் இன்னும் போதுமான டாங்கிகள் உள்ளன. தரைப்படைகள் இழப்புகளைச் சந்தித்து வருகின்றன.
ஆனால் ரஷ்யா அதன் மொத்த துருப்பு எண்ணிக்கையை 1.5 மில்லியன் வீரர்களாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என எச்சரித்துள்ளார். 
மிகப் பெரிய தாக்குதலை
மேலும் அவர், ரஷ்யாவின் கருங்கடல் கடற்படை பெரும் சேதத்தை சந்தித்திருந்தாலும், அதன் மற்ற கடற்படைப் படைகள் வலுவாகவே உள்ளன.
அந்நாட்டின் தொடர்ச்சியான மறுசீரமைப்பு தொடர்ந்தால், 2029ஆம் ஆண்டுக்குள் நேட்டோ மீது மிகப் பெரிய தாக்குதலை நடத்தும் திறன் ரஷ்யாவிற்கு இருக்கும் எனவும் கூறியுள்ளார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |