லொட்டரியில் ரூ.60 கோடி பரிசு: ஒரே இரவில் மாறிய சென்னை இளைஞரின் வாழ்க்கை
லொட்டரியில் ரூ.60 கோடி பரிசு கிடைத்த நிலையில், அதை தெரிவிக்க அழைத்த போது சென்னை பொறியாளர் அழைப்பை எடுக்கவில்லை.
ரூ.60 கோடி லொட்டரி
சென்னையை சேர்ந்த 44 வயதான பொறியாளரான சரவணன் வெங்கடாசலம், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றி வருகிறார்.

தனது சக ஊழியர் ஒருவர் லொட்டரியில் பரிசு வென்றதையடுத்து, கடந்த சில ஆண்டுகளாக தானும் லொட்டரி வாங்க தொடங்கியுள்ளார்.
அவ்வபோது, கிரெடிட் கார்டு வெகுமதி புள்ளிகளைப் பயன்படுத்தி டிக்கெட்டுகளை வாங்குவார். அதே போல் கடந்த அக்டோபர் 30 ஆம் திகதி பிக்டிக்கெட் லொட்டரியை வாங்கியுள்ளார்.
இதில், சரவணன் வெங்கடாசலத்திற்கு 25 மில்லியன் திர்ஹம்(இந்திய மதிப்பில் ரூ.60 கோடி) பரிசு கிடைத்துள்ளது.
அழைப்பை எடுக்காத பொறியாளர்
இதனை நேரலையில் அவருக்கு தெரிவிக்க பிக் டிக்கெட் தொகுப்பாளர்கள் ரிச்சர்டும் பவுச்ராவும் அவரை தொலைபேசியில் அழைத்துள்ளனர்.
ஆனால், அவர் தொலைபேசி அழைப்பை தவறவிட்டார். ஸ்பேம் அழைப்பு என நினைத்து மறுபடியும் அந்த எண்ணிற்கு அழைக்கவில்லை.

அதன் பின்னர், அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அழைத்து கூறிய போதே அவருக்கு உண்மை தெரிந்தது. மீண்டும் பிக் டிக்கெட் தொகுப்பாளர்களுக்கு அழைத்து பேசி அதனை உறுதிப்படுத்திக் கொண்டனர்.
இது குறித்து பேசிய அவர், முதலில், என் நண்பர்களும் குடும்பத்தினரும் என்னை கேலி செய்கிறார்கள் என்று நினைத்தேன். என் பெயரைக் கேட்ட பிறகும் கூட என்னால் நம்ப முடியவில்லை.
நான் என் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாத்துவிட்டேன். என் மனதில் இருக்கும் ஒரே விஷயம் அவர்களின் கல்விதான். மகளின் கல்விக்கு சிறிய தொகையை ஒதுக்கி விட்டு, மற்ற தொகையை கவனமாக செலவிட திட்டமிட்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |