ராணுவ சேவையை தவிர்ப்பது எப்படி? ஆலோசனை மையங்களை நாடும் ஜேர்மன் இளைஞர்கள்
ஜேர்மன் அரசு தனது ராணுவத்தை பலப்படுத்துவதற்கான முயற்சிகளைத் துவக்கியுள்ள நிலையில், ராணுவ சேவையை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து அறிவதற்காக ஜேர்மன் இளைஞர்கள் ஆலோசனை மையங்களை நாடிவருகிறார்கள்.
ஆலோசனை மையங்களை நாடும் மக்கள்
ராணுவ சேவை கட்டாயமாக்கப்பட்டால் தங்கள் பிள்ளைகள் உக்ரைனுக்கு போருக்குச் செல்லவேண்டியிருக்குமே என அஞ்சும் பெற்றோர்கள் பலரும் ராணுவ சேவையை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து அறிவதற்காக ஆலோசனை மையங்களை நாடிவருகிறார்களாம்.
சிலர், தாங்கள் கல்வி கற்று முடித்ததும், நீங்கள் இதைத்தான் செய்யவேண்டும் என அரசாங்கம் அவர்களுக்கு சொல்லுவதை இளைஞர்கள் விரும்பவில்லை என்கிறார்கள்.
வேறு சிலரோ, பல மில்லியன் இளைஞர்களின் வாழ்வின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு முடிவை எடுக்கும் முன், அரசு அவர்களையும் கலந்தாலோசிக்கவேண்டும் என்கிறார்கள்.
ராணுவத்தில் சேர ஆர்வம், காட்டும் இளைஞர்கள் கூட, அரசு இளைஞர்களுக்கு தங்கள் நாட்டைக் காப்பாற்றவேண்டும் என்னும் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் உத்வேகம் அளிக்கவேண்டுமேயொழிய, வீம்பாக இப்படித்தான் செய்யவேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது என்கிறார்கள்.
ஆக, இளைஞர்களும், தங்கள் பிள்ளைகள் குறித்து அஞ்சும் பெற்றோர்களும் ராணுவ சேவையை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து ஆலோசனை மையங்களுக்குச் செல்லும் அளவுக்குச் சென்றுவிட்ட நிலையில், இந்த விடயத்தை புத்திசாலித்தனமாக கையாள்வது அரசின் கையில்தான் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |