பொதுத்தேர்தல்... ஜேர்மனியில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பு
ஜேர்மனியில் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்படும் பொதுத் தேர்தலில் ஃபிரெட்ரிக் மெர்ஸின் கன்சர்வேட்டிவ் கட்சி அதிகாரத்தைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணி ஆட்சியை உருவாக்கலாம்
டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் தொடர்ந்து ஆதரித்துவரும் புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) இதுவரை அவர்கள் எதிர்கொண்ட தேர்தலைவிட சிறப்பான வெற்றியைப் பதிவு செய்வார்கள் என்றே கூறப்படுகிறது.
இதுவரையான கருத்துக்கணிப்புகளில் ஃப்ரெட்ரிக் மெர்ஸின் Christian Democratic Union (CDU) கட்சி முதலிடத்தில் இருந்தாலும் ஜேர்மனியின் சிதறுண்ட அரசியல் போக்கின் அடிப்படையில் பெரும்பான்மையைப் பெறுவது சாத்தியமில்லை என்றே கூறப்படுகிறது.
இதனால் அவர்கள் கூட்டணி ஆட்சியை உருவாக்கலாம் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அந்த பேச்சுவார்த்தைகள் தந்திரமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புலம்பெயர்வு தொடர்பான கருத்தியல் மோதல்களால் ஏற்பட்ட பிறவுகளே முதன்மையான காரணமாக கூறப்படுகிறது. மட்டுமின்றி (AfD போன்ற தீவிர வலதுசாரிக் கட்சியை எவ்வாறு சமாளிக்கிறார்கள் என்பதையும் பொறுத்து முடிவுகள் அமையும்.
இதனால், புதிய ஆட்சி அமையும் மட்டும் சில மாதங்கள் சான்சலர் ஓலாஃப் ஷோல்ஸ் ஒரு காபந்து ஆட்சியை முன்னெடுப்பார்.
இரண்டு வருட தொடர்ச்சியான மந்தநிலைக்குப் பிறகும், நிறுவனங்கள் உலகளாவிய போட்டியாளர்களுக்கு எதிராகப் போராடி வருவதாலும், ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தை மீட்டெடுக்க அவசரமாகத் தேவையான கொள்கைகள் இதனால் தாமதமாகும்.
இதுவரை இல்லாத அளவுக்கு
மட்டுமின்றி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகப் போர் அச்சுறுத்தல்கள் உட்பட பல சவால்களைக் கையாள வேண்டிய சூழலில் ஒரு தலைமைத்துவ வெற்றிடத்தையும் இது உருவாக்கும்.
அத்துடன் ஐரோப்பிய தலையீடு இல்லாமல் உக்ரைனுக்கான போர்நிறுத்த ஒப்பந்தத்தை விரைவுபடுத்தவும் ட்ரம்ப் முயற்சி முன்னெடுத்து வருகிறார். ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தைக் கொண்ட ஜேர்மனி, நீண்ட காலமாக அதன் பாதுகாப்பிற்காக அமெரிக்காவை நம்பியிருப்பதால், குறிப்பாக இந்த தாமதம் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது.
மேலும், 2008 ஆம் ஆண்டு நிதி நெருக்கடிக்குப் பிறகு, இதுவரை இல்லாத அளவுக்கு, ஜேர்மனியர்கள் தற்போது தங்கள் வாழ்க்கைத் தரத்தைப் பற்றி மிகவும் அவநம்பிக்கையுடன் உள்ளனர் என்றே கூறப்படுகிறது.
தங்கள் நிலைமை மேம்பட்டு வருவதாகக் கூறும் சதவீதம் 2023ல் 42ல் இருந்து 2024ல் 27 சதவிகிதம் என கடுமையாகக் குறைந்துள்ளது. அத்துடன் இடம்பெயர்வு குறித்த அணுகுமுறைகளும் கடினமாகிவிட்டன.
இந்த நிலையில் ஆளும் ஓலாஃப் ஷோல்ஸின் கட்சி இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் மிக மோசமான தோல்வியை இந்தமுறை எதிர்கொள்ளும் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |