ஜேர்மனியில் பரவும் பறவைக்காய்ச்சல்: 500,000 பறவைகள் அழிப்பு
ஜேர்மனியில் பறவைக்காய்ச்சல் பரவிவரும் நிலையில், சுமார் 500,000 பறவைகள் கொல்லப்பட்டுள்ளன.
ஜேர்மனியில் பரவும் பறவைக்காய்ச்சல்
ஜேர்மனியின் பல பகுதிகளில், குறிப்பாக, வட கிழக்குப் பகுதிகளில், பறவைக்காய்ச்சல் பரவிவருகிறது.
பறவைகள் வளர்க்கும் பண்ணைகளில் 30 பறவைகளுக்கும், காட்டுப் பறவைகளில் 73 பறவைகளுக்கும் பறவைக்காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கால்நடை நோய்களைக் கண்காணிக்கும் அரசு நிறுவனமான Friedrich Loeffler நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து, கோழிகள், வாத்துகள் மற்றும் வான்கோழிகள் என சுமார் 500,000 பறவைகள் கொல்லப்பட்டுள்ளன.
பொதுவாக பறவைக்காய்ச்சலால் மனிதர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என கூறப்பட்டாலும், பறவைக்காய்ச்சல் வைரஸ் அதிக அளவில் பெருகினால் அது மனிதர்களை பாதிக்கக்கூடும்.

என்றாலும், இதுவரை அப்படி ஒரு நிலையை தாங்கள் கண்டதில்லை என்கிறது ஜேர்மன் ஃபெடரல் நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு.
இருந்தாலும், மறைமுகமாக பறவைக்காய்ச்சல் மனிதர்களை பாதிக்க முடியும். அதாவது, பறவைக்காய்ச்சல் காரணமாக பறவைகள் கொல்லப்படுவதால், இறைச்சி மற்றும் முட்டை விலை அதிகரிக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |