ஐரோப்பாவில் எந்தெந்த நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது? வெளியான முழு விபரம்
ஐரோப்பாவில் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இதில் ஜேர்மனி மற்றும் பெல்ஜியம் அதிக பாதிப்பை சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகில் கொரோனா பாதிப்பு முதல் அலையின் போது, ஐரோப்பிய நாடுகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதையடுத்து தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, அதன் பின் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தது. பலி எண்ணிக்கையும் குறைந்து வந்தது.
இந்நிலையில், தற்போது மீண்டும் ஐரோப்பாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஜேர்மனி, பெல்ஜியம் போன்ற நாடுகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஜேர்மனியில் கொரோனாவின் 4-வது அலை தாக்கியிருப்பதாக, நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கூறியுள்ளார். இதன் காரணமாக, ஜேர்மனியில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
இதே போன்று பெல்ஜியத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் இங்கிருக்கும் மக்கள் வீட்டில் இருந்தே பணிபுரியும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்கள், அருங்காட்சியங்களில் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ஆஸ்திரியா, அவுஸ்திரேலியாவில் பாதிப்பு அதிகமாகி இருப்பதா, நோய் தொற்று ஏற்படலாம் என கருதப்படும் 20 லட்சம் மக்கள் வெளியே வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்து, சுவீடன், செக்குடியரசு, ஸ்லோவாக் கியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பிரான்ஸ் நாட்டில் ஏற்கனவே 5-வது அலையின் தாக்கம் தொடங்கி இருந்தது. கடந்த சில நாட்களாக அங்கும் தொற்று மிக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.