ஜேர்மனியின் புதிய பாதுகாப்பு கவசத் திட்டம்: வெளிநாட்டு அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி
அதிகரித்து வரும் வான்வழி பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தொடர்ந்து ஜேர்மனி பாதுகாப்பு கவசத்தை உருவாக்க திட்டமிட்டு வருகிறது.
ஜேர்மனியின் பாதுகாப்பு கவச திட்டம்
நாட்டின் லிப்ஜிக் ஹாலே(Leipzig-Halle Airport) விமான நிலையம் ட்ரோன் தாக்குதலுக்காக குறிவைக்கப்பட்டதை அடுத்து, அதிகரித்து வரும் வான்வழி மற்றும் டிஜிட்டல் தாக்குதலை சமாளிக்க ஜேர்மனி வலுவான பல அடுக்கு பாதுகாப்பு கவசத்தை உருவாக்க திட்டமிட்டு வருகிறது.
இந்த பல அடுக்கு பாதுகாப்பு கவசமானது நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகள், பெரிய நகரங்கள் மற்றும் போக்குவரத்து மையங்கள் ஆகியவற்றை வெளிநாட்டு அச்சுறுத்தல்கள் மற்றும் உளவு வேலைகளில் இருந்து பாதுகாக்கும் என ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டொப்ரிண்ட் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய திட்டத்தின் கீழ் ட்ரோன் தடுப்பு பிரிவுகள் நாட்டின் பல பகுதிகளுக்கு விரிவாக்கப்படுகின்றன.
வான்வழி அச்சுறுத்தல்களை சமாளிப்பதோடு, டிஜிட்டல் ஹேக்கிங் முயற்சிகளை கட்டுப்படுத்த தேசிய இணைய பாதுகாப்பு கவசம் ஒன்றையும் அறிமுகப்படுத்த ஜேர்மனி திட்டமிட்டுள்ளது.
இதில் செயற்கை நுண்ணறிவு(AI), வீடியோ கண்காணிப்பு மற்றும் பயோமெட்ரிக் ஆகிய நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு சந்தேகத்திற்குரிய நபர்களை முன்கூட்டியே அடையாளம் காண அரசு திட்டமிட்டுள்ளது.

இது அரசு துறை மற்றும் முக்கிய நிறுவனங்களை குறிவைத்து நடத்தப்படும் சைபர் தாக்குதல்களை கட்டுப்படுத்த இந்த புதிய முன்னெடுப்பானது எடுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 4ம் திகதி ஜேர்மனியின் லிப்ஜிக் ஹாலே விமான நிலையத்தின் மீது ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அடுத்தே இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு ரஷ்யா தான் காரணம் என்று ஜேர்மனியின் உளவுத்துறை குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |