கடந்த 24 மணி நேரத்தில்.,உக்ரைனிய சூறையாடிய ரஷ்யா: 8 பேர் பலி, 69 பேர் காயம்
Russia’s Overnight Attacks on Ukraine 8 Dead: கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவின் தொடர் தாக்குதல்
உக்ரைனிய நகரங்களை குறிவைத்து கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யா நடத்திய தொடர் தாக்குதலில் 8 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 69 பேர் காயமடைந்துள்ளனர் என உக்ரைனிய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் கார்கிவ் மாகாணத்தில் 4 பேர், கெர்சன் மாகாணத்தில் 2 பேர், ஜபோரிஜியா மாகாணம் மற்றும் மைக்கோலைவ் மாகாணத்தில் தலா ஒருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

உக்ரைனை நோக்கி ஏவப்பட்ட ட்ரோன்கள்
இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 108 ட்ரோன்களை ரஷ்யா பயன்படுத்தி இருப்பதுடன், பல S8000 Banderol ஏவுகணைகளையும் தாக்குதலுக்கு ஏவியுள்ளது.
ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் சேர்த்து கிட்டத்தட்ட 88 வான்வழி தாக்குதல் ஆயுதங்களை உக்ரைனிய விமானப்படை வெற்றிகரமாக இடைமறித்து அழித்து விட்டதாக தெரிவித்துள்ளது.
இருப்பினும் 11 வெவ்வேறு இடங்களில் ரஷ்ய ஆயுதங்கள் தங்களது இலக்குகளை அடைந்து தாக்குதல்களை நிறைவேற்றியுள்ளன.
அத்துடன் சுட்டு வீழ்த்தப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் உதிரி பாகங்களும் 7 இடங்களில் விழுந்துள்ளன.
அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் இருவரும் உக்ரைனிய தலைநகர் கீவ்விற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் அதற்கு சற்று முன்னதாக இந்த கொடூர தாக்குதல் அரங்கேறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |