ரஷ்யாவுக்காக உளவு பார்த்த உக்ரைன் நாட்டவர்கள்: ஜேர்மனி சுவிஸ் அதிகாரிகள் நடவடிக்கை
ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளில், ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக உக்ரைன் நாட்டவர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
ரஷ்யாவுக்காக உளவு பார்த்த உக்ரைன் நாட்டவர்கள்
ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து அதிகாரிகள் இணைந்து ஜேர்மனியிலுள்ள Constance, Cologne மற்றும் சுவிட்சர்லாந்தின் Thurgau மாகாணம் ஆகிய இடங்களில் நடத்திய ரெய்டுகளைத் தொடர்ந்து உக்ரைன் நாட்டவர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் மூன்று பேரும் ரஷ்யாவுக்காக வேலை செய்வதாகவும், உக்ரைனில் நாசவேலைகளில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாகவும் கருதப்படுகிறது.
அதாவது, உக்ரைனிலுள்ள சில முகவரிகளுக்கு GPS ட்ராக்கர்களுடன் பார்சல்களை அவர்கள் அனுப்பியதாக சந்தேகிக்கப்படுகிறது.
வழியில் வெடிக்கும் வகையில் அந்த பார்சல்களில் வெடிப்பொருட்களை அனுப்பவும் அவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |