வெற்றியை நோக்கி முன்னேறும் புலம்பெயர்தல் எதிர்ப்பு கட்சி... ஜேர்மனியை கவலைப்படவைத்துள்ள ஒரு தகவல்
ஜேர்மன் நகரமொன்றில் புலம்பெயர்தல் எதிர்ப்பு கட்சி ஒன்று வெற்றியை நோக்கி முன்னேறிவரும் நிலையில், அது சில தரப்பினரை கவலையடையச் செய்துள்ளது.
வெற்றியை நோக்கி...
ஜேர்மன் நகரமான Gelsenkirchenஇல் நடைபெற்ற ஃபெடரல் தேர்தலில் புலம்பெயர்தல் எதிர்ப்பு கட்சியும் வலதுசாரிக் கட்சியுமான Alternative for Germany (AfD) நல்ல முன்னேற்றதைக் கண்டிருந்தது.
இந்நிலையில், அங்கு விரைவில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற உள்ளன. உள்ளாட்சித் தேர்தல்களிலும் AfD கட்சி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுவதால், ஆளுங்கட்சிகளும், புலம்பெயர்தல் ஆதரவு அமைப்புகளும் கவலையடையத் துவங்கியுள்ளன.
Gelsenkirchen நகரில், குற்றச்செயல்களை நடத்தும் கும்பல்கள், வெளிநாடுகளிலிருந்து மக்களை வரவழைத்து, பல பாழடைந்த கட்டிடங்களில் தங்கவைத்து அவர்களை வேலைவாங்கியதுடன், அவர்களுக்கு அரசு வழங்கும் நிதி உதவியையும் ஏமாற்றிப் பறித்துவந்தன.
ஆளுங்கட்சிகள் அதை இதுவரை கண்டுகொள்ளாத நிலையில், இப்போது தேர்தல் நெருங்கவும் அந்தக் கட்டிடங்களை இடிக்கத் துவங்கியுள்ளன.
ஆனால், அது காலம் கடந்த ஞானம் என உள்ளூர் மக்கள் கருதுகிறார்கள். ஆக, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டு, தேர்தல் வருகிறது என்றதும் அந்தக் கட்டிடங்களை இடிக்க ஆளுங்கட்சிகள் நடவடிக்கை எடுப்பதை கண்டும் காணாமல் இருக்கிறார்கள் மக்கள்.
காரணம், அந்த கும்பல்களின் அராஜக செயல்களைக் கண்டு கொதித்துப் போயுள்ள அவர்கள், புலம்பெயர்தலை எதிர்க்கும் AfD கட்சிக்கு ஆதரவளிப்பது என ஏற்கனவே முடிவு செய்துவிட்டார்கள்.
ஆக, மக்கள் ஆதரவு AfD கட்சிக்கு உள்ளது, உள்ளாட்சித் தேர்தல்களிலும் அக்கட்சியே வெற்றி பெறும் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளதால் ஆளுங்கட்சியினர் கவலை அடைந்துள்ளார்கள்.
அதேநேரத்தில், புலம்பெயர்தல் ஆதரவு அமைப்புகளும், AfD கட்சி ஆட்சிக்கு வந்தால் தங்களுக்கும் தங்களை நம்பியிருக்கும் புலம்பெயர்ந்தோருக்கும் சிக்கல்தான் என்பது தெளிவாகியுள்ளதால் கவலையில் ஆழ்ந்துள்ளன.
AfD கட்சிக்கு உலக கோடீஸ்வரரான எலான் மஸ்கின் ஆதரவும் உள்ளது.
Either Germany votes @AfD or it is the end of Germany https://t.co/Ix58V4USrn
— Elon Musk (@elonmusk) August 31, 2025
கடந்த மாதம் சமூக ஊடகமான எக்ஸில் எலான் மஸ்க் வெளியிட்டிருந்த செய்தி ஒன்றில், AfD கட்சிக்கு வாக்களிக்கவில்லையென்றால், ஜேர்மனிக்கு முடிவுதான் என்று குறிப்பிட்டிருந்த விடயம் பெருமளவில் கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |