இத்தாலியை புரட்டியெடுத்த ஜேர்மனி! சுழன்றடித்த வீரர்கள்
ஜேர்மனி கால்பந்து அணி 5-2 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது.
ஐரோப்பிய ஒன்றிய கால்பந்து சங்கங்களின் நாடுகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஜேர்மனி மற்றும் இத்தாலி அணிகள் மோதின.
பரபரப்பாக தொடங்கிய இந்த போட்டியில், ஜேர்மனியின் கிம்மிக் 10வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து கணக்கை தொடங்கினார். அதன் பின்னர், கூடுதல் நேரத்தின்போது கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மற்றோரு ஜேர்மனி வீரரான குன்டோகன் கோல் அடித்தார்.
இதன்மூலம் ஜேர்மனி அணி முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஆதிக்கம் செலுத்தியது. அதனைத் தொடர்ந்து பிற்பாதியில் ஜேர்மனியின் நட்சத்திர வீரர் தாமஸ் முல்லர் 51வது நிமிடத்தில் கோல் அடித்தார். இது அவருக்கு 44வது சர்வதேச கோல் ஆகும்.
ஜேர்மனி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த இத்தாலி பதில் கோல் அடிக்க போராடியது. ஆட்டத்தின் 68 மற்றும் 69 நிமிடங்களில் ஜேர்மனி வீரர் டிமோ வெர்னர் அடுத்தடுத்து கோல்கள் அடித்து மிரட்டினார்.
Photo Credit: Federico Gambarini/picture alliance via Getty Images
இத்தாலி அணிக்கு ஒரு வழியாக 78வது நிமிடத்தில் முதல் கோல் கிடைத்தது. நாண்டோ அந்த கோலை அடித்தார். பின்னர் கூடுதல் நேரத்தில் இத்தாலி வீரர் அலெசான்ட்ரோ ஒரு கோல் அடித்தார்.
இறுதியில் ஜேர்மனி அணி 5 - 2 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது. இரண்டு கோல்கள் அடித்த ஜேர்மனி வீரர் டிமோ வெர்னர் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
Photo Credit: Reuters