ஜேர்மனியில் கட்டாய ராணுவ சேவை மீண்டும் திரும்பலாம்: மசோதா நிறைவேற்றம்
ஜேர்மனியில் ராணுவ சேவைக்கு தன்னார்வலர்களை அழைக்கும் மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாதுகாப்பை பலப்படுத்திவரும் ஜேர்மனி
உக்ரைனை ரஷ்யா ஊடுருவியதைத் தொடர்ந்து, தங்கள் பாதுகாப்பை வலுப்படுத்தத் துவங்கியுள்ள ஐரோப்பிய நாடுகளில் ஜேர்மனியும் ஒன்று. புதிதாக ஜேர்மன் சேன்ஸலராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரெட்ரிக் மெர்ஸ், ஜேர்மன் ராணுவத்தின் பலத்தை அதிகாரிக்கும் முயற்சிகளில் ஆர்வம் காட்டிவருகிறார்.
அவ்வகையில், ஜேர்மன் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்புக்காக சில திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ராணுவத்தில் சேர விருப்பமுள்ளவர்கள் அதற்காக பதிவு செய்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளார்கள்.
நாட்டிலுள்ள அனைத்து 18 வயது இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் ராணுவத்தில் சேர்வது தொடர்பான கேள்விகள் அடங்கிய படிவம் ஒன்று ஒன்லைனில் அனுப்பப்படும்.
அந்த படிவத்தை நிரப்புவது ஆண்களுக்குக் கட்டாயம், பெண்களில் விருப்பமுள்ளவர்கள் அதை நிரப்பலாம்.
கட்டாய ராணுவ சேவை மீண்டும் திரும்பலாம்
தற்போது ஜேர்மன் கேபினட், ஜேர்மன் ராணுவ சேவைக்கு தன்னார்வலர்களை அழைக்கும் மசோதா ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
ஆனால், தன்னார்வலர்கள் எண்ணிக்கை போதுமானதாக இல்லையென்றால், கட்டாய ராணுவ சேவை மீண்டும் திரும்பலாம் என சேன்ஸலரின் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களே தெரிவித்துள்ளார்கள்.
அது தொடர்பில் ஜேர்மன் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுவருகிறார்கள்.
ஆக, தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவின்படி ராணுவத்தில் சேர விண்ணப்பிக்கும் தன்னார்வலர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லையென்றால், ஜேர்மனியில் கட்டாய ராணுவ சேவை மீண்டும் திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |