ஆப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் ஜேர்மனியில் விலையுயர்ந்துள்ள பொருள்: ஒரு சுவாரஸ்ய தகவல்
கிறிஸ்துமஸ் பண்டிகை மிக அருகில் நெருங்கிவரும் நிலையில், ஜேர்மனியில் சாக்லேட்டுகளின் விலை உயர்ந்துள்ளது.
ஜேர்மனியில் சாக்லேட் விலை உயர்வின் பின்னணியில், மேற்கு ஆப்பிரிக்கா உள்ளது என்பதைக் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆப்பிரிக்க பிரச்சினையால் ஜேர்மனியில் விலையுயர்ந்துள்ள சாக்லேட்
சாக்லேட்களில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருள் கொக்கோ ( cocoa beans) ஆகும். விடயம் என்னவென்றால், ஜேர்மனியில் சாக்லேட் தயாரிப்பதற்கான கொக்கோ, மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
மேற்கு ஆப்பிரிக்காவில் மோசமான அறுவடை, ஏற்றுமதி செய்வதற்கான செலவு அதிகரிப்பு மற்றும் கொக்கோவுக்கான டிமாண்ட் அதிகரிப்பு ஆகிய காரணங்களால், 2023ஆம் ஆண்டை ஒப்பிடும்போது கொக்கோவின் விலை 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
கொக்கோ விலை உயருமானால், சாக்லேட் விலையும் உயரும். ஆனாலும், ஜேர்மானியர்கள் சாக்லேட் சாப்பிடுவதைக் குறைக்கவில்லை.
2018இல், ஆளுக்கு, ஆண்டொன்றிற்கு 9 கிலோ சாக்லேட் சாப்பிட்ட ஜேர்மானியர்கள், 2023இல், ஆளுக்கு 10 கிலோ சாக்லேட் சாப்பிட்டுள்ளார்கள்.
ஜேர்மனியைப் பொருத்தவரை, கிறிஸ்துமஸ் பண்டிகையின்போதும், டிசம்பர் மாதம் 6ஆம் திகதி கொண்டாடப்படும் St. Nicolas day என்னும் பண்டிகையின்போதும் அதிக அளவில் சாக்லேட்டுகளையும் சாக்லேட் பானங்களையும் மக்கள் உட்கொள்வது வழக்கமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |