ஈரான் தாக்குதலால் பிராந்திய போர் உருவாகும்: கொதித்தெழுந்த ஜேர்மனி
இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலுக்கு ஜேர்மனி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்
கடந்த ஏப்ரல் 1ம் திகதி டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக சனிக்கிழமை(நேற்று) மாலை ஈரானிய ராணுவம் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது.
இஸ்ரேலிய இராணுவத்தின் தகவல்படி, கிட்டத்தட்ட 200 ராக்கெட்டுகள் மற்றும் ட்ரோன்களை ஏவி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இவற்றில் பெரும்பான்மை ராக்கெட்டுகள் இடைமறிக்கப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
Interceptions over northern Israel pic.twitter.com/E4ebFbtXxX
— Mossad Commentary (@MOSSADil) April 14, 2024
ஈரானுக்கு ஜேர்மனி கண்டனம்
இந்நிலையில், ஜேர்மனி அரசாங்கம் ஈரானின் சமீபத்திய தாக்குதலை "கடுமையான வார்த்தைகளில்" கண்டித்துள்ளது.
ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸின்(Olaf Scholz) செய்தித் தொடர்பாளர், இந்த தாக்குதல் பிராந்தியத்தில் முழு அளவிலான போருக்கு வழிவகுக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது என்று எச்சரித்தார்.
"இந்த பொறுப்பற்ற மற்றும் நியாயப்படுத்த முடியாத தாக்குதலின் மூலம், ஈரான் ஒரு பிராந்திய தீவிர மோதல் அபாயத்தை எதிர்கொள்கிறது," என்று செய்தித் தொடர்பாளர் கூறினார். அத்துடன் ஜேர்மனி இஸ்ரேலின் பக்கம் உறுதியாக நிற்கிறது." என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜேர்மனியின் இந்த கண்டனம் ஈரானின் தாக்குதலுக்கு சர்வதேச சமூகத்தின் பரவலான எதிர்ப்பை பிரதிபலிக்கிறது. அமெரிக்கா, பிரித்தானியா ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல நாடுகள் இந்த தாக்குதலை கண்டித்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |