இந்தியர்களுக்கான விசா செயலாக்க நேரத்தை அதிரடியாக குறைத்த ஜேர்மனி.! ஏன் இந்த மாற்றம்?
ஜேர்மனி செல்வதற்கு ஆவலாக இருக்கும் இந்திய தொழில்நுட்ப நிபுணர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது.
ஜேர்மன் வீசா செயலாக்க நேரம் 9 மாதங்களிலிருந்து தற்போது வெறும் 2 வாரங்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது.
ஏன் இந்த மாற்றம்?
ஜேர்மனியில் திறமையான தொழிலாளர்கள் மிகவும் அவசரமாக தேவைப்படுகின்றனர், இதனால் இந்தியர்களுக்கான வீசா விண்ணப்பங்களை வேகமாகச் செயலாக்கி வருகின்றனர்.
ஜேர்மனியில் திறமையான தொழிலாளர்கள் மிகவும் அவசரமாக தேவைப்படுகின்றனர், இதனால் இந்தியர்களுக்கான வீசா விண்ணப்பங்களை வேகமாகச் செயலாக்கி வருகின்றனர்.
ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சர் அனாலெனா பேர்பாக், "தேசிய வீசாக்களுக்கான உலகின் மிகப்பாரிய வீசா அலுவலகமாக ஜேர்மனியின் வெளியுறவுத்துறை உள்ளது, மேலும் இங்கே திறமையான தொழிலாளர்கள் மிகவும் அவசரமாக தேவை" என்று கூறினார்.
ஜேர்மனி, இந்தியர்கள் மத்தியில் அதிகமாக பிரபலமாகி வருகிறது. இது வேலை வாய்ப்புகள் மட்டுமின்றி, கல்வி நிலையங்களுக்காகவும் பிரபலமாக உள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில், ஜேர்மனியில் சேரும் இந்திய மாணவர்கள் 107% அதிகரித்துள்ளனர்.
இதற்குக் காரணங்கள்:
- சம்பள அளவில் வசதியான வாழ்க்கைத் தரம்
- சிறந்த கல்வி முறைமை
- வீசா நடைமுறைகள் எளிதானவை
- ஆங்கிலத்தில் கற்பிக்கப்படும் படிப்புகள்
இந்திய நிபுணர்கள் ஜேர்மனி செல்வதற்கு, தங்கள் தகுதிகள் அங்கீகரிக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டும் மற்றும் அங்கு வேலைக்கு அழைப்பு பெற்றிருக்க வேண்டும்.
ஜேர்மனி செல்ல, ஒரு வருடம் கால அவகாசம் உள்ள பாஸ்போர்ட், வேலை ஒப்பந்தம், மற்றும் பொருளாதார ஆதாரங்களைத் தயாரிக்க வேண்டும்.
இந்தியர்கள் ஜேர்மனி செல்வதற்கான செயல்முறைகள் மிகவும் எளிதானவையாக மாறியுள்ளதால், இது இந்திய தொழிநுட்ப நிபுணர்கள் மற்றும் மாணவர்களுக்கு மேலும் ஒரு சிறந்த வாய்ப்பாக மாறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Germany cuts visa processing time for Indian skilled workers, India Germany, German Visa processing time 2 weeks