குடிபோதையில் ஜேர்மானியர் செய்த செயல்
மதுபான விடுதி ஒன்றில் மது அருந்திக்கொண்டிருந்த ஜேர்மானியர் ஒருவர் ஜன்னல் வழியாக கீழே விழுந்துள்ளார்.
குடிபோதையில் ஜேர்மானியர் செய்த செயல்
புதன்கிழமை இரவு 11.00 மணியளவில், ஜேர்மனியின் Schwäbisch Hall நகரில், பொலிசாருக்கு அவசர உதவி கோரி ஒரு அழைப்புவந்துள்ளது.
அழைத்த நபர், தான் எங்கிருக்கிறேன் என தெரியவில்லை என்றும், தான் காயமடைந்துள்ளதாகவும் கூறி, தனக்கு உதவுமாறு கோரியுள்ளார்.

அவரைத் தேடிச் சென்ற பொலிசார், மூடியிருந்த இறைச்சிக்கடை ஒன்றிற்குள் அவரைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
நடந்தது என்னவென்றால், அருகிலுள்ள மதுபான விடுதியில் மது அருந்திக்கொண்டிருந்த அவர், குடிபோதையில் ஜன்னல் வழியாக கீழே விழுந்திருக்கிறார்.
அவர் விழுந்த இடம், அந்த மதுபான விடுதிக்கு அருகிலுள்ள இறைச்சிக்கடை!
குடிபோதையில் சில சொசேஜ்களை எடுத்து சாப்பிட்டுவிட்டு, அதற்குப் பின் பொலிசாரை அழைத்துள்ளார் அவர்.
இதற்கிடையில், அந்த நபர் விழுந்ததில் தனது இறைச்சிக்கடையின் கூரையும் கதவும் சேதமடைந்துள்ளதாகவும், தன் கடையிலிருந்து அந்த நபர் சொசேஜ்களை எடுத்து சாப்பிட்டுள்ளதாகவும் புகாரளித்துள்ளார் அந்தக் கடையின் உரிமையாளரான Nadja Merkel என்னும் பெண்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |