ஜேர்மன் முன்னாள் உளவுத்துறை தலைவர் கைது: பரபரப்பை உருவாக்கியுள்ள தகவல்
Germany's ex-spy chief arrested for espionage: உளவு பார்த்த குற்றத்துக்காக, ஜேர்மன் முன்னாள் உளவுத்துறை தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜேர்மன் முன்னாள் உளவுத்துறை தலைவர், உளவு பார்த்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
ஜேர்மன் முன்னாள் உளவுத்துறை தலைவர் கைது
1998ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டுவரை, ஜேர்மனியின் உளவுத்துறைத் தலைவராக பொறுப்பு வகித்தவர் ஆகஸ்ட் ஹேன்னிங்.

ஹேன்னிங், இன்று காலை அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக ஃபெடரல் விசாரணை அதிகாரிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹேன்னிங், உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அதிகாரிகள், அவர் மீது நாட்டின் ரகசியங்களை வெளிப்படுத்தியது, தேசத்துரோகம் செய்ய முயன்றது மற்றும் ரகசிய உளவாளியாக செயல்பட்டது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
ஹேன்னிங்கின் கூட்டாளியான மேன்ஃப்ரெட் (Manfred D) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இருவருடைய வீடுகளிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுவருகிறார்கள்.