திடீரென ரஷ்ய தூதரக அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேற்றிய ஜேர்மனி: அரசு அளித்துள்ள விளக்கம்
ஏப்ரல் மாதத்தில் ரஷ்ய தூதரக அதிகாரிகள் சிலரை நாட்டைவிட்டு வெளியேற்றியது ஜேர்மனி.
விளக்கமளித்துள்ள ஜேர்மனி அரசு
அதனால் ஆத்திரமடைந்த ரஷ்யாவும், பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக, ஜேர்மன் தூதரக அதிகாரிகள் சுமார் 20 பேரை ரஷ்யாவிலிருந்து வெளியேற்றியது.
முதலில், எதனால் ஜேர்மனி ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது என்பது குறித்து விளக்கமளிக்கவில்லை. இந்நிலையில், தற்போது அது குறித்து ஜேர்மனி அரசு விளக்கமளித்துள்ளது.
ஒரு காலத்தில் ரஷ்யாவுடன் நட்பாக இருந்தது ஜேர்மனி. ஆனால், உக்ரைன் போர் துவங்கியபிறகு ரஷ்யாவிடமிருந்து விலகிய ஜேர்மனி, உக்ரைனுக்கு உதவத் துவங்கியது.
Photo: picture alliance/dpa | Rolf
உக்ரைன் போர் துவங்கியபிறகு, ரஷ்யா ஜேர்மனியில் உளவு பார்க்கும் விடயங்கள் அதிகரிக்கத் துவங்கியதை ஜேர்மன் உளவுத்துறை கவனித்துள்ளது.
2022ஆம் ஆண்டு இளவேனிற்காலத்தில் 40 ரஷ்ய தூதரக அதிகாரிகளை ஜேர்மனி நாட்டைவிட்டு வெளியேற்றியது. அவர்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ஜேர்மனி நம்பியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதிகரித்த உளவு பார்த்தல்
கடந்த அக்டோபரில், ஜேர்மனியின் சைபர் பாதுகாப்பு ஏஜன்சியின் தலைவரான Arne Schönbohm, ரஷ்ய உளவுத்துறையுடன் நெருக்கம் காட்டியதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து பதவிநீக்கம் செய்யப்பட்டார்.
அதற்கு ஒரு மாதத்திற்குப் பின், ஜேர்மன் இராணுவ அதிகாரி ஒருவர் ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததற்காக தண்டிக்கப்பட்டார்.
ஆக, ஜேர்மனிக்கான ரஷ்ய தூதர்கள், ஜேர்மனியில் தங்கள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதர்களாக இல்லாமல், தங்கள் நாட்டுக்காக உளவு பார்ப்பதாக கருதப்பட்டதைத் தொடர்ந்தே, அவர்கள் ஜேர்மனியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தற்போது ஜேர்மனி அரசு விளக்கமளித்துள்ளது.
voanews