பெரும் தொல்லை.. ரஷ்ய தூதரக அதிகாரிகள் மீது சுவிஸ் மக்கள் புகார்
சுவிட்சர்லாந்திலுள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகள் மீது உள்ளூர் மக்கள் புகார் தெரிவித்துள்ளார்கள்.
ரஷ்ய தூதரக அதிகாரிகள் மீது சுவிஸ் மக்கள் புகார்
சுவிஸ் நகரமான Bernஇல் அமைந்துள்ள ரஷ்ய தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், உள்ளூர் சாலைகளில் அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட அதிக வேகத்தில் பயணிப்பதாகவும், தங்கள் வாகனங்களை சட்ட விரோதமாகவும், இடையூறாகவும் நிறுத்துவதாகவு ம் உள்ளூர் மக்கள் புகார் தெரிவித்துள்ளார்கள்.
பிரச்சினையில் தலையிட்ட வெளியுறவு அமைச்சகம்
இந்த பிரச்சினை தொடர்பாக, ரஷ்ய தூதரகத்துக்கு அருகே வாழும் மக்கள் சுவிஸ் வெளியுறவு அமைச்சரான Ignazio Cassisக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்கள்.
@Russian embassy Bern (c) Хрюша
அதைத் தொடர்ந்து, போக்குவரத்து விதிகளை மதித்து நடக்குமாறு ரஷ்ய தூதரக அதிகாரிகளுக்கு வெளியுறவு அமைச்சகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
ஆனால், தங்கள் மீதான குற்றச்சாட்டை ரஷ்ய தூதரகம் மறுத்துள்ளது. ரஷ்ய தூதரான Sergei Garmonin, இதுவரை எந்த தூதரக அதிகாரிக்கும் விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்படவில்லை என்றும், பார்க்கிங் தொடர்பான பிரச்சினைகளுக்கான அபராதங்கள் அனைத்தையும் ரஷ்ய தூதரகமே செலுத்திவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
@© Keystone / Anthony Anex