எல்லைக் கட்டுப்பாடுகளை மீண்டும் நீட்டித்துள்ள ஜேர்மனி
Germany extends border controls: ஜேர்மனி எல்லைக் கட்டுப்பாடுகளை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.
ஜேர்மனி, எல்லைக் கட்டுப்பாடுகளை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக ஜேர்மன் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எல்லைக் கட்டுப்பாடுகள் மீண்டும் நீட்டிப்பு
சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதற்காகவும் பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டும், ஜேர்மனி எல்லைக் கட்டுப்பாடுகளை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக ஜேர்மன் உள்துறை அமைச்சரான அலெக்சாண்டர் டொப்ரிண்ட் (Alexander Dobrindt) தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அமுலிலிருக்கும் ஜேர்மன் எல்லைக் கட்டுப்பாடுகள் செப்டம்பர் நடுப்பகுதியில் முடிவடைய இருக்கும் நிலையில், 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் நடுப்பகுதி வரை அவை நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துதல், ஐரோப்பாவின் எல்லைப் பகுதிகளில் நிலவும் தற்போதைய பாதுகாப்புச் சூழல், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எல்லைகளில் ஏற்படும் திடீர் குடியேற்ற அழுத்தங்கள் போன்ற காரணங்களாலேயே ஜேர்மனி இந்த முடிவை எடுத்துள்ளது.
ஜேர்மனி, 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், தனது அனைத்து நில எல்லைகளிலும் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |