ஜேர்மனியில் இன்று பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு: முடிவுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?
ஜேர்மனியில் இன்று பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
கருத்துக்கணிப்பில், தற்போதைய சேன்சலர் ஓலாஃப் ஷோல்ஸின் (Olaf Scholz) சமூக ஜனநாயகக் கட்சி (SDP) பின்தங்கியிருப்பதாகத் தெரிகிறது.
சேன்சலர் பதவிக்கான போட்டியில் எதிர்க்கட்சியான கிறிஸ்துவ ஜனநாயக யூனியனின் (CDU) பிரெடெரிக் மாட்ஸ் (Friedrich Merz) முன்னிலை வகிக்கிறார்.
இவை தவிர, Alice Weidel-ன் தீவிர வலதுசாரி கட்சியான ஜேர்மனிக்கான மாற்று (AFD) கட்சியும் செல்வாக்கு பெற்று வருகிறது.
[42BVAI ]
கருத்துக்கணிப்பின்படி, 29 சதவீத மக்கள் பிரெடெரிக் மாட்ஸின் கட்சியை ஆதரிக்கின்றனர், அதேவேளையில் 21 சதவீதத்தினர் தீவிர வலதுசாரி கட்சியான AFD-ஐ ஆதரிக்கின்றனர். இவர்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் இளைஞர்கள்.
சேன்சலர் ஷொல்ஸின் சமூக ஜனநாயகக் கட்சி 16 சதவீத மக்களின் ஆதரவுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
அதே நேரத்தில், ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பசுமைக் கட்சி 12% வாக்குகளையும், சுதந்திர ஜனநாயகக் கட்சி 7% வாக்குகளையும் பெற முடியும்.
இந்த இரண்டு கட்சிகளும் தான் இறுதியில் ஆட்சியை நிர்ணயிக்கும் முக்கியமான கூட்டாளிகளாக வரலாம்.
வாக்குப்பதிவு 10 மணி நேரம் நடைபெறும்
உள்ளூர் நேரப்படி, வாக்களிக்கும் நேரம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இருக்கும்.
84 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டில், 60 மில்லியன் மக்கள் பொதுத் தேர்தலில் வாக்களிப்பார்கள்.
வாக்குப்பதிவு முடிந்த பிறகு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகும். வாக்கு எண்ணிக்கையும் தொடங்கும்.
வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரங்களிலேயே ஆரம்ப முடிவுகள் தெளிவாக இருக்கும். முடிவு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு திங்கள்கிழமை காலைக்குள் வெளியாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |