ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: மத்திய கிழக்கு பயணத்தை நிறுத்திய ஜேர்மன் அமைச்சர்
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நிகழ்த்தியதைத் தொடர்ந்து, ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் தனது மத்திய கிழக்கு பயணத்திட்டத்தில் மாற்றம் செய்துள்ளார்.
பயணத்தை நிறுத்திய ஜேர்மன் அமைச்சர்
ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Johann Wadephul எகிப்து, இஸ்ரேல், சவுதி அரேபியா ஜோர்டான், லெபனான் மற்றும் சிரியாவுக்கு பயணிக்க இருந்தார்.
ஆனால், இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நிகழ்த்தியதைத் தொடர்ந்து, அவர் தனது பயணத்தை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பகுதிகளுக்கு பயணிக்கவேண்டாம் என ஜேர்மனி தனது குடிமக்களை எச்சரித்துள்ளது.
முடிந்தால், காசா மற்றும் West Bank பகுதிகளிலிருக்கும் ஜேர்மன் குடிமக்கள் அங்கிருந்து வெளியேறுமாறும் ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |