ஈரான் போரில் ஜேர்மனியும் இணைகிறதா?
ஈரான் போரில் ஜேர்மனியும் இணைவதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவருகின்றன.
இஸ்ரேல் ஊடகமொன்றில் வெளியான செய்தி
இஸ்ரேல் ஊடகமான The Times of Israel என்னும் ஊடகம், ஈரான் அண்டைநாடுகளை தாக்குவதை நிறுத்தாவிட்டால், ஈரானுடனான அமெரிக்க இஸ்ரேல் போரில் இணைவது குறித்து ஜேர்மனி தீவிரமாக சிந்தித்துவருவதாக ஜேர்மன் அரசியல் மற்றும் ராணுவ வட்டாரங்கள் இஸ்ரேல் வானொலியிடம் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது.

அது குறித்து ஜேர்மன் அரசு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Johann Wadephul, இஸ்ரேல் ஊடகங்களில் வெளியாகிவரும் செய்திகளை மறுத்துள்ளார்.

ஈரான் போரில் நேரடியாக பங்கேற்கும் எண்ணம் ஜேர்மனிக்கு இல்லை என்று கூறிய அவர், அதே நேரத்தில், ஜோர்டான் மற்றும் ஈராக்கில் முகாமிட்டுள்ள ஜேர்மன் வீரர்கள் தாங்கள் தாக்கப்பட்டால் தங்களைக் காத்துக்கொள்ள பதிலடி கொடுப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |