ஜேர்மன் வெளியுறவு அமைச்சரின் சீனப்பயணம் திடீர் ரத்து
ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் நாளை சீனா புறப்பட இருந்த நிலையில், அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சரின் சீனப்பயணம் திடீர் ரத்து
ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Johann Wadephul, நாளை சீனா செல்ல இருந்தார். திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் சீன தரப்பைச் சார்ந்தவர்களை அவர் சந்திப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், திடீரென அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணத்திட்டத்தை ரத்து செய்தது ஜேர்மனியா அல்லது சீன தரப்பா என்பது தெரியவில்லை.
ஜேர்மனி இரண்டு நாட்கள் பல சந்திப்புகளுக்குத் திட்டமிட்டிருந்த நிலையில், ஒரே ஒரு சந்திப்பை மட்டுமே சீன தரப்பு உறுதி செய்தது.
அதாவது, சீன வெளியுறவு அமைச்சரான Wang Yiயை ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Johann Wadephul சந்திப்பதை மட்டும் சீனா உறுதி செய்துள்ளது.
இதற்கிடையில், ஜேர்மன் வெளியுறவு அமைச்சரின் சீனப்பயணம் ரத்து செய்யப்பட்டதற்கு இதுதான் காரணமா, அல்லது, ஜேர்மனி தைவானுக்கு ஆதரவு தெரிவித்துவருவதால் சீனா ஜேர்மன் வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பை ரத்து செய்துவிட்டதா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |