ரஷ்ய மீன் இறக்குமதியை அதிகரித்துள்ள பிரான்ஸ், ஜேர்மனி
Germany, France Boost Russian Fish Imports: ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும் ரஷ்யாவிலிருந்து மீன் இறக்குமதியை அதிகரித்துள்ளன.
ரஷ்ய மீன் பொருட்கள் அதிக அளவில் இறக்குமதி
ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த ரஷ்ய மீன் இறக்குமதி 9 சதவீதம் குறைந்துள்ள நிலையில், ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ரஷ்ய மீன் பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்துள்ளன.
Eurostat தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, ரஷ்ய மீன்பிடி கப்பல் உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.

ஜேர்மனி
ஜேர்மனி, ரஷ்ய மீன் பொருட்களின் மிகப்பெரிய வாடிக்கையாளராக இருந்து, 2026 ஜனவரி-ஆகஸ்ட் காலப்பகுதியில் 78,100 டன் இறக்குமதி செய்துள்ளது.
கடந்த ஆண்டு (2025) இதே காலகட்டத்தில் 70,400 டன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன் ஒப்பிடுகையில் 11 சதவீதம் அதிகம். அதிகரித்துள்ள இறக்குமதியின் மதிப்பு 42 சதவீதம் உயர்ந்து 268.6 மில்லியன் யூரோ ஆகியுள்ளது.
பிரான்ஸ்
பிரான்ஸ், 24,500 டன் ரஷ்ய மீன் பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. இது 21 சதவீதம் அதிகரிப்பு ஆகும். மதிப்பு 41 சதவீதம் உயர்ந்து 105.5 மில்லியன் யூரோ ஆகியுள்ளது.
மொத்தமாக, ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ரஷ்யாவின் மீன் விநியோகம் 142,700 டன்னிலிருந்து 130,400 டன்னாக குறைந்துள்ளது. மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்பட்ட அளவு 52,000 டன்னிலிருந்து 27,800 டன்னாகக் குறைந்துள்ளது. குறிப்பாக போலந்து 14,200 டன்னிலிருந்து 6,300 டன்னாகக் குறைந்துள்ளது.
இருப்பினும் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் Frozen Pollock Fillets ஆகும். ஜேர்மனி 67,800 டன் Pollock இறக்குமதி செய்துள்ளது, இது 13 சதவீதம் அதிகரிப்பு ஆகும். பிரான்ஸ் 16,700 டன் Pollock இறக்குமதி செய்துள்ளது, இது 37 சதவீத உயர்வு ஆகும். கூடுதலாக, Cod இறக்குமதியும் இரு நாடுகளில் அதிகரித்துள்ளது.
ரஷ்ய மீன் ஏற்றுமதியாளர்கள் சங்கம், "ஜேர்மனி, பிரான்ஸ், சீனா போன்ற சில நாடுகளில் வளர்ச்சி இருந்தாலும், அமெரிக்கா போன்ற சந்தைகளில் முழுமையான தடை, அதிக வரிகள் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக உலகளாவிய அளவில் விநியோகத்தை அதிகரிப்பது கடினம்” என தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |