வரி செலுத்த வேண்டிய பில்லியனர்களின் பட்டியல் - 200 பேருக்கு தனிப்பட்ட கண்காணிப்பு
UK Targets 200 Billionaires in Tax Crackdown: பிரித்தானியாவில் வரி செலுத்த வேண்டிய பில்லியனர்களின் பட்டியலில் 200 பேர் இடம்பெற்றுள்ளனர்.
வரி செலுத்த வேண்டிய பில்லியனர்களின் பட்டியல்
பிரித்தானிய வரித்துறை HM Revenue and Customs (HMRC), நாட்டில் வரி செலுத்த வேண்டிய பில்லியனர்களின் பட்டியலை முதன்முறையாக உருவாக்கியுள்ளது. இதில் 200 பில்லியனர்கள் அடங்கியுள்ளனர்.

இவர்களின் சிக்கலான வரி விவகாரங்களை கண்காணிக்க, ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட “Customer Compliance Manager” (CCM) நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
HMRC, பில்லியனர்களின் வரி விவகாரங்கள் பல்வேறு நாடுகள், நிறுவனங்கள் மற்றும் வரி பிரிவுகளுடன் தொடர்புடையதால், அவற்றை ஒருங்கிணைத்து கண்காணிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக தெரிவித்துள்ளது.
CCM-கள், பில்லியனர்கள் வரி தாக்கல் செய்வதற்கு முன் அவர்களுடன் தன்னார்வ கலந்துரையாடல்கள் நடத்தி, அவர்களின் பிரித்தானிய வரி நிலையை தெளிவுபடுத்துவார்கள்.
மேலும், HMRC புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. AI, advanced analytics, automated triggers போன்ற முறைகள் மூலம், 200,000 பவுண்டுக்கு மேற்பட்ட ஆண்டு வருமானம் அல்லது 2 மில்லியன் பவுண்டுக்கும் மேற்பட்ட சொத்துகள் கொண்டவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.
500 மில்லியன் பவுண்டு வருவாய்
2024-25 ஆம் ஆண்டுக்கான “wealthy tax gap” 3.6 பில்லியன் பவுண்டு என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, பிரித்தானியா முழுவதும் உள்ள வரி இடைவெளியின் 6 சதவீதம் ஆகும்.
HMRC, இந்த நடவடிக்கைகள் மூலம் குறைந்தது 500 மில்லியன் பவுண்டு வருவாய் ஈட்டவும், 2030-க்குள் கூடுதலாக 10 பில்லியன் பவுண்டு வரி வசூலிக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளது.
கடந்த ஆண்டு, நாடாளுமன்றத்தின் Public Accounts Committee HMRC-ஐ, 1.3 மில்லியன் பணக்காரர்களின் வரி நிலையை சரியாக புரிந்துகொள்ளாததற்காக விமர்சித்தது.
சட்ட நிபுணர்கள், 200,000 பவுண்டுக்கு மேற்பட்ட வருமானம் அல்லது 2 மில்லியன் பவுண்டுக்கு மேற்பட்ட சொத்துகள் கொண்டவர்கள், தங்களின் பிரித்தானிய வரி நிலையை தெளிவாக நிரூபிக்க தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை, பிரித்தானிய அரசின் சூப்பர் ரிச் வரி சோதனையின் முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |