இலவச பயணச்சீட்டுகள்... நட்பு நாட்டுடன் இணைந்து பிரான்ஸ் திட்டம்
உலகப்போர்களில் எதிரிகளாக இருந்த பிரான்சும் ஜேர்மனியும், பின்னர் நட்பு நாடுகளாகின. அதற்காக இரு நாடுகளுக்குமிடையில் ஒரு ஒப்பந்தமும் செய்யப்பட்டது.
The Élysee Treaty என்னும் அந்த ஒப்பந்தம், 1963ஆம் ஆண்டு ஜனவரி மாதம், முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி Charles de Gaulle, மற்றும் முன்னாள் ஜேர்மன் சேன்ஸலர் Konrad Adenauer ஆகியோருக்கிடையே கையெழுத்தானது.
இலவச பயணச்சீட்டுகள்
தற்போது, அந்த ஒப்பந்தத்தைக் கொண்டாடும் வகையில், இரு நாடுகளும் தங்கள் குடிமக்கள் பரஸ்பரம் மற்ற நாட்டுக்கு இலவசமாக பயணிக்கும் வகையில் இலவச பயணச்சீட்டுகளை வழங்குகின்றன.
பிரான்ஸ் 30,000 பயணச்சீட்டுக்ளையும், ஜேர்மனி 30,000 பயணச்சீட்டுகளையும் இலவசமாக வழங்குகின்றன. இந்த ஆண்டில் எப்போது வேண்டுமானாலும், ஏழு நாட்களுக்கு இந்த பயணச்சீட்டுகளைப் பயன்படுத்தி மக்கள் பயணம் செய்யலாம்.
குறிப்பாக இரு நாட்டு இளைஞர்களும் மற்ற நாட்டுக்குப் பயணிப்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்த இலவச பயணச்சீட்டுகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Shutterstock/olrat