பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் மாடர்னா தடுப்பூசிக்கு தடை! வேறு தடுப்பூசி போட பரிந்துரை
ஜேர்மனி மற்றும் பிரான்சில் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி கொள்கையில் ஜேர்மன் மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர்களின் குழுவான தடுப்பூசி ஸ்டாண்டிங் கமிஷன் (STIKO), Pfizer-BioNTech Covid-19 தடுப்பூசியை மட்டுமே 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறியது.
மாடர்னா தடுப்பூசி பெற்றவர்களைக் காட்டிலும், ஃபைசரின் தடுப்பூசியை பெற்ற இளம் வயதினர் இதய அழற்சியின் விகிதங்கள் சற்றே குறைவாக இருப்பதாக STIKO குழு தெரிவித்துள்ளது.
தற்போது பூஸ்டர் தடுப்பூசிகள் மற்றும் முதல் தடுப்பூசியை பெறுபவர்கள் உள்ளடக்கிய வரைவு பரிந்துரை, இப்போது தனி நிபுணர்கள் குழு மற்றும் ஜேர்மன் மாநிலங்களால் மதிப்பீடு செய்யப்பட்டு, திருத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பிரெஞ்சு சுகாதாரத் துறைக்கு ஆலோசனை வழங்கும் குழு, 30 வயதிற்குட்பட்டவர்களில் அரிதான இதய அழற்சியின் ஆபத்து ஃபைசரின் தடுப்பூசி மாடர்னாவை விட 5 மடங்கு குறைவாக இருப்பதாகத் தெரிகிறது என பரிந்துரைக்கிறது.
Photo: REUTERS/Carlos Osorio
இதனால், பிரான்சிலும் இனி 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு மாடர்னா தடுப்பூசி தடை செய்யப்படுகிறது.
ஏற்கெனெவே, பின்லாந்து, சுவீடன், டென்மார்க் மற்றும் நார்வே உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மாடர்னா தடுப்பூசியை குறிப்பிட்ட இளைய வயதினருக்கு மாடர்னாவின் கோவிட்-19 தடுப்பூசியின் பயன்பாட்டை தடை செய்துள்ளன.
அந்த வரிசையில் தற்போது ஜேர்மனியும் பிரான்சும் இணைந்துள்ளன.