வெளிநாடு சுற்றுலா சென்ற ஜேர்மன் குடும்பம் சந்தித்துள்ள துயரம்
வெளிநாடொன்றிற்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் குடும்பம் ஒன்று தங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரை இழந்து துயரத்தில் வாடுகிறது.
ஜேர்மன் சிறுமிக்கு நேர்ந்த துயரம்
ஜேர்மன் குடும்பம் ஒன்று ஐஸ்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தது.
சனிக்கிழமையன்று அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகள்கள் இருவரும் Reynisfjara கடற்கரைக்குச் சென்றிருந்தார்கள்.
தந்தையும் மகள்களும் கடலில் இரங்கி விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென அலையில் சிக்கியுள்ளார்கள்.
அந்த தந்தையும் ஒரு மகளும் எப்படியோ தப்பி கரைக்கு வந்துவிட, இன்னொரு மகளான ஒன்பது வயதுச் சிறுமி கடலில் மூழ்கிவிட்டாள்.
கடற்படை ஹெலிகொப்டர் ஒன்று உடனடியாக அவளைத் தேடும் முயற்சியில் இறங்க, இரண்டு மணி நேரத்திற்குப் பின் அவள் தண்ணீரில் தென்பட, அவள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள்.
ஆனால், அவள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மகளை இழந்த தந்தையும் சகோதரியை இழந்த மற்றொரு சிறுமியும் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |