தாய்லாந்தில் சந்தித்த தமிழரை காதலித்து கரம்பிடித்த ஜேர்மனி பெண்: பாரம்பரிய முறைப்படி நடந்த திருமணம்
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை ஜேர்மனி பெண் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
தாய்லாந்தில் சந்திப்பு
தமிழக மாவட்டம் திருவண்ணாமலையின் களம்பூரைச் சேர்ந்தவர் கோகுல். இவர் ஐடி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தாய்லாந்து நாட்டில் சோஃபியா என்ற ஜேர்மனியைச் சேர்ந்த சந்தித்துள்ளார்.
பின்னர் இருவரும் நண்பர்களாகி நாளடைவில் காதலர்களாக மாறினர். இரண்டு ஆண்டுகள் கழித்து கோகுல் தனது காதல் விவகாரத்தை பெற்றோரிடம் கூறி திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார்.
முருகன் கோவிலில் திருமணம்
இந்த நிலையில் சோஃபியாவின் குடும்பத்தினரும் ஜேர்மனியில் இருந்து திருவண்ணாமலைக்கு வர, இருவரும் திருமணம் முடிவானது.
தமிழ் பாரம்பரிய முறைப்படி கோகுல், சோஃபியாவுக்கு ஆரணியில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடந்து முடிந்தது.
தனது மனைவி குறித்து பேசிய கோகுல், தனது தாயுடன் பேசுவதற்காகவே சோஃபியா தமிழ் கற்றுக்கொண்டதாகவும், தற்போது படித்துக்கொண்டிருக்கும் அவர் புதுச்சேரியில் வேலைபார்த்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், இருவரும் விரைவில் ஜேர்மனியில் குடியேற உள்ளதாகவும், அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்ல உள்ளதாகவும் கூறினார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |