250 யூரோ: குழந்தை வளர்ப்பிற்கு பணம் வழங்கும் அரசு- எந்த நாட்டில் தெரியுமா?
உலகளவில் பல்வேறு காரணங்களால் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது.
இதில், குழந்தையை வளர்க்க அதிக செலவாகுவதால் தம்பதியர்கள் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பது முக்கிய காரணமாக உள்ளது.
இதனை ஈடுகட்ட, பல்வேறு நாடுகள் குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறது.
ஜெர்மனி
இதே போல் ஜெர்மனியும், கிண்டர்ஜெல்ட் கொள்கை மூலம் குழந்தை வளர்ப்பிற்கு உதவித்தொகை வழங்கி வருகிறது.
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒருவர் விளையாட்டுத்தனமாக வீடியோவில் இந்த திட்டம் குறித்து விளக்கினார்.
அதில் ஜெர்மனியை சேர்ந்த ஒரு நபர் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை. ஆனால் வளர்க்கும் செலவு அதிகம் என்பதால் பெற்றுக்கொள்ளவில்லை என கூறுவார். அவருக்கு இந்த திட்டம் குறித்து விளக்குவது போல் வீடியோ இருந்தது.
எவ்வளவு கிடைக்கும்?
இந்த திட்டப்படி, ஜெர்மனியில் குழந்தைகள் வைத்துள்ள பெற்றோர் அனைவர்க்கும் மாதம் தோறும் 250 யூரோ வழங்கப்படுகிறது.
இது முதல் மற்றும் 2வது குழந்தைகளுக்கு மாதம் 250 யூரோவும், 3வது குழந்தைக்கு 270 யூரோவும் , கூடுதல் குழந்தைகள் பெற்றால் 290 யூரோவும் வழங்கப்படுகிறது.
யாருக்கெல்லாம் கிடைக்கும்?
இந்த உதவித்தொகையை பெற பெற்றோருக்கு எந்த வருமான வரம்பும் கிடையாது. மேலும், தத்தெடுக்கப்ட்ட குழந்தைகளுக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
அவர்கள் உலகின் எந்த பகுதியில் வசித்து வந்தாலும் இந்த தொகை வழங்கப்படும்.
பெற்றோரில் ஒருவருக்கு மட்டும் இது வழங்கப்படும் என்பதால், யார் அதை பெறுவது என தம்பதிகள் தீர்மானிக்க வேண்டும். பெற்றோர் பிரிந்திருந்தால், குழந்தையை யார் வளர்க்கிறாரோ அவருக்கு வழங்கப்படும்.
பெற்றோர் இல்லாமல், குழந்தை தாத்தா, பாட்டி போன்ற பாதுகாவலரின் கீழ் வளர்ந்தால் அவர்களும் இந்த உதவித்தொகையை கோர முடியும்.
குழந்தை 18 வயதை அடையும் வரை மாத மாதம் இந்த உதவித்தொகையை பெற முடியும். வேலையில்லாமலோ அல்லது மாற்று திறனாளியாகவோ இருந்தால் அந்த வயதையும் தாண்டி உதவித்தொகை பெற முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |