அமெரிக்க மருத்துவருக்கு எபோலா நோய் தொற்று: குடும்பத்தினருக்கு ஜேர்மன் அரசு வழங்கிய அனுமதி
எபோலா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்ட அமெரிக்க மருத்துவரை அவரது குடும்பத்தினர் சந்திக்க ஜேர்மனி அனுமதி வழங்கியுள்ளது.
மருத்துவரை சந்திக்க ஜேர்மனி அரசு அனுமதி
எபோலா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட அமெரிக்க மருத்துவர் ஒருவர், பெர்லினில் உள்ள புகழ்பெற்ற ஷாரிட் பல்கலைக்கழகத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டின் கிழக்கு பகுதியில் மருத்துவ சேவையில் ஈடுபட்டிருந்த போது அமெரிக்க மருத்துவருக்கு எபோலா(Ebola) நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஷாரிட் மருத்துவமனையில் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உயர்தர பாதுகாப்பு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அமெரிக்க மருத்துவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் எபோலா நோய்த்தொற்றுக்கு பாதிக்கப்பட்ட அமெரிக்க மருத்துவரை அவரது குடும்பத்தினர் சந்திக்க ஜேர்மனி அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அமெரிக்க அரசின் கோரிக்கையை ஏற்று ஜேர்மன் சுகாதார அமைச்சர் புதன்கிழமை இந்த முடிவை அறிவித்துள்ளார்.
இதன் மூலம் எபோலா நோய்த்தொற்றுக்கு பாதிக்கப்பட்ட அமெரிக்க மருத்துவரை அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவரின் குடும்பத்தினருக்கு ஏதேனும் பாதிப்புகள் உள்ளதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |