100 ஆண்டுகளுக்குப் பிறகு அவுஸ்திரேலிய பழங்குடியின எச்சங்களை ஒப்படைக்கும் ஜேர்மனி
100 ஆண்டுகளுக்குப் பிறகு ஜேர்மனிய அருங்காட்சியகத்தில் இருந்து அவுஸ்திரேலிய பழங்குடியின முன்னோர்களின் எச்சங்கள் திருப்பி கொடுக்கப்பட்டது.
ஜேர்மனிய அருங்காட்சியகங்களில் 19-ஆம் நூற்றாண்டிலிருந்து சேமிக்கப்பட்டிருந்த அவுஸ்திரேலிய பழங்குடியின முன்னோர்களின் ஐந்து எச்சங்கள், ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் திருப்பி ஒப்படைக்கப்பட்டன.
இது பழங்குடியின சமூகத்தினருக்கு வேதனையுடன் கூடிய மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.
இந்த நிகழ்வானது, குடியேற்ற காலத்தின்போது பிற நாடுகளிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட மனித எச்சங்களையும் பண்பாட்டு பொருட்களையும் திருப்பி ஒப்படைக்கும் ஜேர்மனியின் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
இந்த நிகழ்வில், 1880ஆம் ஆண்டில் பெர்லினுக்கு கொண்டு செல்லப்பட்ட மூன்று எச்சங்களும், ஓல்டென்பர்க் நகரில் இருந்த மற்ற இரண்டு எச்சங்களும் தோரஸ் ஸ்டிரெய்ட் தீவுகள் பகுதிக்கு சேர்ந்த உகார் தீவு சமூகத்தின் நான்கு பிரதிநிதிகளுக்கு ஒப்படைக்கப்பட்டன.
“இந்த மூதாதையர் எச்சங்கள் ஒருபோதும் இங்கு இருக்கக்கூடாது,” என பெர்லினின் Prussian Cultural Heritage Foundation-ன் தலைவர் ஹெர்மன் பார்ஸிங்கர் தெரிவித்தார்.
அவர், குடியேற்ற காலத்தில் ஐரோப்பியர்கள் பிற சமூகங்களை குறைவாக மதித்து, அவர்களின் சமாதிகளை தகாத முறையில் கைப்பற்றியது பற்றி கூறினார்.
இது குறித்து பேசிய அவுஸ்திரேலிய தூதர் நட்டாஷா ஸ்மித், ஜேர்மனியாவில் இருந்து இதுவரை 162 எச்சங்களும், உலகெங்கிலும் இருந்து 1,700 எச்சங்களும் அவுஸ்திரேலியாவுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளதாக்க கூறினார்.
உகார் தீவு பிரதிநிதி ராக்கி ஸ்டீபன், “144 ஆண்டுகள் கழித்தும் இந்த எச்சங்கள் வீட்டிற்கு திரும்புவது சோகத்திலும் ஒரு மன ஆறுதலான செயலாகும்,” என மனப்பூர்வமாக குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வு, குடியேற்ற கால பழைய அழிவுகளை சரிசெய்யும் நோக்கத்தில் உலகளாவிய முனைப்புகளை வெளிப்படுத்துகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Germany Australia, Germany hands over Australian ancestral remains