புலம்பெயர்தல் தொடர்பில் நாடொன்றுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டுள்ள ஜேர்மனி
புலம்பெயர்தல் ஜேர்மனி அரசியலில் முக்கிய பேசுபொருளாகியுள்ள நிலையிலும், ஆப்பிரிக்க நாடொன்றுடன் புலம்பெயர்தல் தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டுள்ளது அந்நாடு.
புலம்பெயர்தல் தொடர்பில் நாடொன்றுடன் ஒப்பந்தம்
ஜேர்மனி, ஆப்பிரிக்க நாடான கென்யாவுடன், புலம்பெயர்தல் தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டுள்ளது.
அந்த ஒப்பந்தத்தின்கீழ், ஆப்பிரிக்காவிலுள்ள திறன்மிகுப் பணியாளர்கள் ஜேர்மனியில் வாழ்வும், பணி செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ஜேர்மனியில் வாழ அனுமதியில்லாத கென்யா நாட்டவர்களை, அந்நாட்டுக்கு விரைவாக திருப்பி அனுப்புவதையும் அந்த ஒப்பந்தம் எளிதாக்குகிறது.
ஜேர்மனி அரசியலில் புலம்பெயர்தல் முக்கிய பேசுபொருளாகியுள்ளது என்றாலும், உண்மையில், ஜேர்மனிக்கு ஆண்டொன்றிற்கு சுமார் 400,000 திறன்மிகு புலம்பெயர்ந்தோர் தேவைப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |