பொருளாதார மந்த நிலையை சந்தித்துள்ள ஜேர்மனி: பின்னணியில் ரஷ்ய எரிவாயு
ஐரோப்பாவின் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றான ஜேர்மனி, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் பொருளாதார மந்த நிலையை அடைந்துள்ளது.
வீழ்ச்சியடைந்த பொருளாதாரம்
ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில், ஜேர்மனியின் பொருளாதாரம் 0.3 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஒரு நாட்டு மக்கள், பரவலாக, செய்வதறியாமல் தங்கள் செலவுகளை குறைக்கும் எண்ணத்துடன் தொடர்ந்து செயல் படும் பொழுது அந்நாட்டில் மந்தநிலை ஏற்பட்டதாக கருதப்படுகிறது.
GETTY IMAGES
அத்துடன், தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளில் ஒரு நாட்டில் பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்படும்போது அந்நாடு பொருளாதார மந்த நிலையை அடைந்துள்ளதாக கருதப்படுகிறது.
ஜேர்மனியைப் பொருத்தவரை, இதற்கு முந்தைய காலாண்டிலும், அதாவது, 2022ஆம் ஆண்டின் கடைசி காலாண்டான, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்திலும் பொருளாதாரம் 0.5 சதவிகிதம் வீழ்ச்சியடைந்தது.
ஆகவேதான், ஜேர்மனி, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் பொருளாதார மந்த நிலையை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
BBC
பின்னணியில் ரஷ்ய எரிவாயு
எரிவாயுவுக்காக ஜேர்மனி ரஷ்யாவை பெருமளவில் சார்ந்திருந்தது அனைவரும் அறிந்ததே.
உக்ரைன் போரைத் தொடர்ந்து, எரிவாயு விடயத்தில் ரஷ்யா ஜேர்மனியைக் கைவிட, விலைவாசி உயர, பணவீக்கம் அதிகரிக்க, ஜேர்மன் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு, இப்போது பொருளாதார மந்த நிலையை அடைந்துள்ளது ஜேர்மனி.
BBC