ஜேர்மன் இராணுவ பலம் அதிகரிப்பு: படை வீரர்கள் எண்ணிக்கை பெரும் அதிகரிப்பு
ஜேர்மனி தங்களுடைய இராணுவ பலத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
இராணுவ வீரர்கள் அதிகரிப்பு
ஜேர்மனி தங்களது இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2030ம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் படை வீரர்களின் மொத்த எண்ணிக்கையை 4,60,000 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் படி, ஜேர்மன் ராணுவத்தின் நிரந்தர பணி வீரர்கள் மற்றும் இருப்பு படை ஆகிய இரண்டு பிரிவுகளிலும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி, தற்போது உள்ள நிரந்தர பணி வீரர்கள் 1,86,000 லிருந்து 2,60,000 ஆக அதிகரிக்கப்படுகிறது.
இருப்பு படை வீரர்களின் எண்ணிக்கை 70,000 லிருந்து 2,00,000 ஆக உயர்த்தப்பட உள்ளது.
கட்டமைக்கப்பட்ட மாற்றத்தை உறுதி செய்ய இந்த உத்தி 3 நிலைகளில் செயல்படுத்தப்படும் என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |