118.5 மில்லியன் யூரோக்களுக்கு வெடிமருந்து வாங்க ஜேர்மன் திட்டம்: பலனடையும் உக்ரைன்
ஜேர்மனி கிட்டத்தட்ட 29 ஆயிரம் வெடிகுண்டுகளை வாங்க விரும்புவதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
29 ஆயிரம் வெடிகுண்டுகள்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை தொடங்கியதில் இருந்து, உக்ரைனுக்கான ஆயுத உதவியை ஜேர்மன் பெருமளவு வழங்கி வருகிறது.
போர் தொடங்கிய ஒன்றை வருடமாக டாங்கிகள், கண்ணி வெடிகள், வெடி குண்டுகள் போன்றவற்றை ஜேர்மனி தொடர்ந்து உக்ரைனுக்கு நேரடியகவோ மறைமுகமாவோ தொடர்ந்து வழங்கி வருகிறது.
#Germany intends to buy almost 29 thousand shells for self-propelled howitzers PzH 2000 in the amount of 118.5 million euros, writes Bloomberg.
— NEXTA (@nexta_tv) June 20, 2023
This will help replenish the stocks of ammunition for rapid-fire howitzers supplied to #Ukraine. pic.twitter.com/vQVUTOfhM3
இவை ஜேர்மன் வெடிமருந்து கையிருப்பு குறிப்பிடத்தக்க வகையில் சரிந்ததற்கான காரணமாக இருப்பதாக தகவல்கள் ஒருப்புறம் கூறப்பட்டு வருகிறது..
இந்நிலையில் சுயமாக இயங்ககூடிய PzH 2000 ரக ஹோவிட்சர்களுக்கு பயன்படுத்தடுத்தப்படும் சுமார் 29 ஆயிரம் வெடிகுண்டுகளை 118.5 மில்லியன் யூரோக்களுக்கு வாங்க ஜேர்மன் திட்டமிட்டு வருவதாக ப்ளூம்பெர்க் தனது பக்கத்தில் எழுதியுள்ளது.
உக்ரைனுக்கான வெடிமருந்து
ப்ளூம்பெர்க் தகவலின் படி, ஜேர்மன் PzH 2000 ரக ஹோவிட்சர்களுக்கான வெடிமருந்துகளின் கையிருப்பை நிரப்பினால் உக்ரைனுக்கான ரேபிட்-ஃபயர் ரக ஹோவிட்சர்களுக்கான வெடிமருந்து கையிருப்பு நிரப்புவதற்கு உதவியாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
For those wondering why Germany supplies weapons almost exclusively through the industry: Today @derspiegel reports based on documents of the German MoD that the German army only has ~ 20k DM121 155mm rounds left. pic.twitter.com/2jMdVSvANo
— deaidua.org ????? (@deaidua) June 19, 2023
இதற்கிடையில் ஜேர்மன் MoDன் ஆவணங்களின் அடிப்படையில் ஜேர்மன் ராணுவத்திடம் 20k DM121 155mm சுற்றுகள் மட்டுமே மீதமிருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |