புச்சாவில் பொதுமக்களை படுகொலை செய்ததை ஒப்புக்கொண்ட ரஷ்யா! முக்கிய ஆதாரத்தை கைப்பற்றிய ஜேர்மனி
உக்ரைனில் பொதுமக்களை படுகொலை செய்ததை ரஷ்ய வீரர்கள் ஒப்புக்கொள்ளும் முக்கிய ஆதாரத்தை ஜேர்மனி கைப்பற்றியுள்ளது.
உக்ரைனின் புச்சா நகரில் ரஷ்ய படைகள் போர் குற்றசத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ரஷ்ய இதை மறுத்து வந்தாலும், புச்சா படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க புதிய கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இந்நிலையில், புச்சாவில் பொதுமக்களை படுகொலை செய்தததை ரஷ்ய வீரர்கள் ஒப்புக்கொள்ளும் ரேடியோ செய்தியை ஜேர்மனி கைப்பற்றியுள்ளது.
கைப்பற்றிய ஆதாரங்களை புதன்கிழமை அன்று ஜேர்மன் உளவுத்துறை நாடாளுமன்றத்தில் சமர்பித்துள்ளனர்.
ஆனால், எங்கிருந்து இந்த தகவல்கள் பெறப்பட்டது என்ற விவரத்தை உளவுத்துறை வெளிப்படுத்தவில்லை.
எனினும், கைப்பற்றப்பட்ட செய்திகள் புச்சாவில் இடம்பெற்ற படுகொலைகளுடன் ஒத்துப்போவதாக கூறப்படுகிறது.
உக்ரைன் மருத்துவமனையிலிருந்து நோயாளிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றி ரஷ்யர்கள்! வீடியோ ஆதாரம்
ஜேர்மனி கைப்பற்றிய செய்தி ஒன்றில், சைக்கிளில் வந்த நபர் ஒருவரை சுட்டது குறித்து ரஷ்ய வீரர்கள் விவாதிப்பது பதிவாகியுள்ளது.
கீவ் அருகே உள்ள புறநகரில் சைக்கிளுக்கு அருகே ஒருவர் இறந்து கிடக்கும் புகைப்படத்துடன் இது ஒத்துப்போவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கருத்து தெரிவிக்க ஜேர்மனி அரசாங்க செய்தித்தொடர்பாளர் மறுத்துள்ளார்.