உக்ரைன் மருத்துவமனையிலிருந்து நோயாளிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றி ரஷ்யர்கள்! வீடியோ ஆதாரம்
உக்ரைன் மருத்துவமனையிலிருந்து மருத்துவ ஊழியர்கள் மற்றும் நோயாளிகளை ரஷ்ய வீரர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது 43வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, புச்சா நகரில் போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள மருத்துவமனையிலிருந்து நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்களை ரஷ்ய வீரர்கள் வெளியேற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.
குறித்த வீடியோவை மரியுபோல் நகர கவுன்சில் பகிர்ந்துள்ளது.
மருத்துவமனையிலிருந்து நோயாளிகள், மருத்துவ ஊழியர்களை கட்டாயமாக வெளியேற்றிய ரஷ்ய படைகள், அவர்களை வரிசையாக அழைத்துச்சென்று ராணுவ வாகனத்தில் ஏற்றுகின்றனர்.
உக்ரைனில் சரமாரியாக குண்டுகளை பொழிந்த ரஷ்ய போர் விமானங்கள்! வெளியான வீடியோ ஆதாரம்
அவர்கள் அனைவரும் ரஷ்யாவால் சுதந்திர நாடுகளாக அறிவிக்கப்பட்ட இரண்டில் ஒன்றான DPR-க்கு அழைத்துச்செல்லப்பட்டதாக மரியுபோல் நகர கவுன்சில் தெரிவித்துள்ளது.
Video of the #Russian occupiers forcibly removing medical staff and patients from the city hospital №4
— WithUkraine 24/7 (@With__Ukraine) April 7, 2022
Source: #Mariupol City Council #StopPutinNOW #StopKillingUkrainians pic.twitter.com/ZEjXw3Xov1
அதுமட்டுமின்றி, கிட்டதட்ட 40,000 மரியுபோல் நகர வாசிகள் வலுக்கட்டாயமாக பெரும்பாலும் ரஷ்ய நகரங்களுக்கு நாடுகடத்தப்பட்டதாக நகர கவுன்சில் தெரிவித்துள்ளது.