உக்ரைனில் சரமாரியாக குண்டுகளை பொழிந்த ரஷ்ய போர் விமானங்கள்! வெளியான வீடியோ ஆதாரம்
உக்ரைனில் ரஷ்ய போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை பொழிந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது 43வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, புச்சா நகரில் போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
புச்சா படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், புடினின் இரண்டு மகள்கள் மீது பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்கா, ரஷ்ய வங்கி மீதான தடைகளை கடுமையாக்கியுள்ளது.
இதனிடையே, உக்ரைன் மீது இரண்டு ரஷ்ய போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை பொழியும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
எனினும், உக்ரைனின் எந்த பகுதியில் இந்த சம்பவம் நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
ரஷ்யாவின் SU-25 ரக போர் விமானங்கள், குறைந்த உயரத்தில் பறந்த படி சரமாரியாக குண்டுகளை பொழிந்து செல்கின்றன.
Low-flying Russian Su-25 attack aircraft in Ukraine. https://t.co/y8xcFFwMPN pic.twitter.com/EqRiBi96pZ
— Rob Lee (@RALee85) April 7, 2022
வரிசை கட்டிய ரஷ்ய துருப்புகள்...ஒற்றை ஆளாய் தீர்த்துக்கட்டிய உக்ரைன் டாங்கி: வீடியோ ஆதாரம்!
இதை சம்பவயிடத்தில் இருந்த நபர ஒருவர் போனில் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.