ஜேர்மனி: புதிய அரசின் முதல் வேலையே புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதுதானாம்
ஜேர்மனியில், சேன்ஸலர் பிரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், அரசின் முதல் வேலையே புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலானதாகத்தான் இருக்கும் போலிருக்கிறது.
காரணம், அரசு பொறுப்பேற்றதுமே, கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகளை செயல்படுத்தும் வகையில், எல்லையில் பொலிசாரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எல்லையிலேயே திருப்பி அனுப்பத் திட்டம்
புதிய அரசின் புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள் குறித்து பேசியுள்ள ஜேர்மனியின் புதிய உள்துறை அமைச்சரான அலெக்சாண்டர் (Alexander Dobrindt), புகலிடக்கோரிக்கையாளர்கள் எல்லையிலேயே திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில், கர்ப்பிணிகள், குழந்தைகள் உள்ளிட்ட எளிதில் அபாயத்துக்குள்ளாகும் நிலையிலிருக்கும் மக்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனி, விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கும் ஷெங்கன் பகுதிக்குள் வருவதால், பல நாட்டவர்களும் தடையின்றி ஜேர்மனிக்கு வரும் நிலை காணப்படுகிறது.
ஆகவே, தன் நாட்டு எல்லையில் அதிக பொலிசாரை நிறுத்தி நாட்டுக்குள் நுழைவோரை சோதனை செய்ய ஜேர்மனி அரசு முடிவு செய்துள்ளது.
நாங்கள் எங்கள் எல்லைகளை மூடப்போவதில்லை என்று கூறும் ஜேர்மனியின் உள்துறை அமைச்சரான அலெக்சாண்டர், எங்கள் எல்லையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்கப்போகிறோம்.
அதனால், திருப்பி அனுப்பப்பட இருப்போரின் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளது என்கிறார்.
கொஞ்சம் கொஞ்சமாக எல்லைக் கட்டுப்பாடுகளையும், திருப்பி அனுப்பப்பட இருப்போரின் எண்ணிக்கையையும் அதிகரிப்போம் என்று கூறும் அலெக்சாண்டர், படிப்படியாக, எல்லையில் நிற்கும் பொலிசாரின் எண்ணிக்கையை அதிகரிப்பதையும், புகலிடக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்புவதை அதிகரிப்பதையும் உறுதி செய்வோம் என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |