ஜேர்மனி தயாராக இருக்கிறது! உக்ரைன் ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு பிறகு அதிபர் பேட்டி
ரஷ்யாவுடன் ஐரோப்பிய பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஜேர்மனி தயாராக உள்ளது என அந்நாட்டு அதிபர் Olaf Scholz தெரிவித்துள்ளார்.
உக்ரைன் எல்லைக்கு அருகே ரஷ்யா அதன் படைகளை குவித்துள்ளார் இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
ரஷ்யா எந்தநேரத்திலும் வேண்டுமானாலும் தாக்குதலை தொடங்கலாம் என அமெரிக்க எச்சரித்துள்ள நிலையில், ரஷ்யா-உக்ரைன் இடையேயான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பதற்றத்தை தணிக்க சமீபத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், இரு நாடுகளுக்கும் பயணித்து, இரு நாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
மக்ரோனை தொடர்ந்து உக்ரைனுக்கு பயணித்த ஜேர்மன் அதிபர் Olaf Scholz, உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskiy-ஐ சந்தித்து உரையாடினார்.
இந்த சந்திப்புக்கு பிறகு உக்ரைன் தலைநகர் Kyiv-வில் செய்தியாளர்களை சந்தித்த Olaf Scholz, உக்ரைன் உடனான பதற்றத்தை தணிக்க ரஷ்யா தரப்பிலிருந்து சரியான நடவடிக்கைகள் என எதிர்பார்க்கிறேன்.
ஜேர்மனியும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும் ஐரோப்பிய பாதுகாப்பு தொடர்பாக ரஷ்யாவுடன் தீவிரமான பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளன.
அதேசமயம், ஜேர்மனியில் இருந்து உக்ரைனுக்கு 150 மில்லியன் யூரோக்கள் புதிய கடனுதவியை Scholz அறிவித்தார்.
மேலும் ரஷ்யா உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறினால் மிகவும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க மேற்கு நாடுகள் தயாராக இருப்பதாக Olaf Scholz கூறினார்.