டிக்கெட் வாங்காமல் பயணித்தால் சிறைத்தண்டனை விதிக்கும் நாடு
ஜேர்மனியில், பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தும்போது டிக்கெட் வாங்காமல் பயணிப்பவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
டிக்கெட் வாங்காமல் பயணித்தால் சிறைத்தண்டனை
ஆம், ஜேர்மனியில் ரயில், பேருந்து முதலான பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தும்போது டிக்கெட் வாங்காமல் பயணிப்பவர்களுக்கு 60 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும். அபராதத்தை செலுத்த இயலாதவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

கடந்த ஆண்டுகளில், சுமார் 9,000 பேர் இப்படி டிக்கெட் வாங்காமல் பயணித்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
மாற்ற விரும்பும் அமைச்சர்
இந்நிலையில், ஜேர்மன் நீதித்துறை அமைச்சரான ஸ்டெபனி (Stefanie Hubig), அதை மாற்ற விரும்புகிறார்.
டிக்டெட் வாங்க இயலவில்லை என்பதற்காக ஒருவரை சிறையில் அடைப்பது சரியா என கேள்வி எழுப்பும் அவர், எதிர்காலத்தில் டிட்டெட் வாங்க இயலாதவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை மாற்ற விரும்புகிறார்.

தவறான இடத்தில் பார்க்கிங் செய்பவர்களுக்கு என்ன தண்டனையோ, அதே அளவிலான குறைந்த தண்டனையையே டிக்டெட் வாங்க இயலாதவர்களுக்கும் வழங்கலாம் என்பது அவர் கருத்து.
ஸ்டெபனியின் திட்டத்துக்கு நாட்டிலுள்ள சுமார் 60,000 சட்டத்தரணிகளைக் கொண்ட சட்டத்தரணிகள் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.
ஆனால், பொலிஸ் யூனியனும், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் ஸ்டெபனியின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |