குடியேற்றவாசிகளின் வன்முறை: மேற்கத்திய நாடுகளுடன் சேர்ந்து..அவசர அழைப்பு விடுத்த ஜேர்மனி
மேற்குக் கரையில் இஸ்ரேலிய அரசாங்கம் ஸ்திரத்தன்மையை சீர்குலைத்து வருகிறது என்று ஜேர்மனி உட்பட மேற்கத்திய நாடுகளின் கூட்டணி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலியக் குடியேற்றங்கள்
சர்வதேச சட்டத்தை மீறுவதாகக் கூறப்படும் இஸ்ரேலியக் குடியேற்றங்கள் கட்டுமானத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
மேற்குக் கரையில் இஸ்ரேலிய அரசாங்கம் ஸ்திரத்தன்மையை சீர்குலைத்து வருகிறது என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பிரித்தானியா, இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா, நோர்வே, நெதர்லாந்து, நியூஸிலாந்து ஆகிய நாடுகளுடன் இணைந்து ஜேர்மனி இதற்காக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், "கடந்த சில மாதங்களாக, மேற்குக் கரையின் நிலைமை கணிசமாக மோசமடைந்துள்ளது. குடியேற்றவாசிகளின் வன்முறை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உள்ளது. இஸ்ரேலியக் கட்டுப்பாட்டை மேலும் வலுப்படுத்துவது உட்பட, இஸ்ரேலிய அரசாங்கத்தின் கொள்கைகளும் நடைமுறைகளும், ஸ்திரத்தன்மையையும் இரு அரசுத் தீர்வுக்கான வாய்ப்புகளையும் சீர்குலைக்கின்றன" என கூறப்பட்டுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |