ஜேர்மனி வேலை வாய்ப்பு: 4 லட்சம் வெளிநாட்டவர்கள் தேவை., தெற்காசிய நாடுகள் மீது ஆர்வம்
மக்கள்தொகை குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ஜேர்மனி, தொழிலாளர் தட்டுப்பாட்டை சமாளிக்க வங்கதேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளிலிருந்து திறமையான தொழிலாளர்களை பணியமர்த்த விரும்புகிறது.
ஐரோப்பாவின் மிகப்பாரிய பொருளாதாரமான ஜேர்மனிக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 4 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்கள் தேவையுள்ளதாக அந்நாட்டு வேலைவாய்ப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
போக்குவரத்து, உற்பத்தி, கட்டுமானம், ஆரோக்கியம், பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
இதை ஊக்குவிக்க ஜேர்மனி, 2024 ஜூன் 1 முதல் புதிய குடியுரிமை விதிகளை எளிமைப்படுத்தியுள்ளது.
இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை குறிவைத்து ஜேர்மன் மொழி வகுப்புகளை பிரச்சாரம் செய்து வருகிறது.
வங்கதேசத்துடன் தொழிலாளர் மாற்ற உடன்படிக்கை இல்லை என்றாலும், அந்நாட்டின் பணியமர்த்தல் அமைச்சகம் தேவைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கலாம் என்று முன்னாள் ஜேர்மன் தூதர் மொஷர்ராப் ஹொசைன் கூறினார்.
2023-ஆம் ஆண்டு ஜேர்மனியின் குடியுரிமை சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு, தொழில் நுட்பங்கள் கொண்டவர்களுக்கு குடியுரிமை பெறுவதும் தொழிலில் உள்ளிடுவதும் எளிதாக்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் மொழியில் B2 மட்டத்தை அடைவது, குறிப்பாக மருத்துவத்துறையில் வேலை பெற உதவிகரமாக இருக்கும் என நிறுவனர் ஷர்மின் அஃப்ரோஸ் கூறினார்.
ஜேர்மனியில் வேலை வாய்ப்புகளைப் பெற விரும்புவோர், ஜேர்மன் மொழி பயிற்சியுடன் கூடிய Ausbildung (ஆழ்ந்த பயிற்சி திட்டங்கள்) வாயிலாகவும் முன்னேற முடியும்.
மேலும் தொழில்துறை கண்காட்சிகளில் பங்கேற்று பணியமர்த்தல் தொடர்புகளை ஏற்படுத்துவது சிறந்த நடைமுறையாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Jobs in Germany, Germany work visa, job opportunities in germany, 15 professions in Germany can get you a work visa, german Jobs